சுமந்திரன் மீது தற்கொலை குண்டு தாக்குதல்,மாவை கூட்டணி தப்புமா?

108
[poll id= “2”]

துரதிஸ்ரவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருப்பது தனக்கு மிகுந்த கவலை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அத்தோடு தேர்தல் முடிந்ததற்கு பிறகு அவர்களை இணைத்து இந்த நெருக்கடியான காலகட்டத்தில், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லவேண்டும் எனும் ஆதங்கத்தோடு தான் இருப்பதாகவும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

மாற்றுத் தலைமை பற்றிய கேள்வுக்கு பதிலளித்த மாவை சேனாதிராஜா

நான் ஒரு கட்சியின் தலைவராக இருக்கின்றேன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு துணைத் தலைவராக இருக்கின்றேன். அவ்வாறு நான் ஒரு கட்சியின் தலைவராக இருந்துகொண்டு மாற்று தலைமை வேண்டும் என்று சொல்வதைப்பொல அறிவீனம் வேறு ஏதும் இருக்காது.

அந்த பலத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெற செய்ய வேண்டும் எனும் கருத்துத்தான் இன்று வரையிலும் மிக பலமாக இருக்கின்றது. அது இன்னும் வருங்காலத்தில் நாங்கள் மக்கள் மத்தியில் வேலை செய்ய ஆரம்பித்தால், எங்களுடைய தேர்தல் அறிக்கையையும் முன்வைத்து நாங்கள் பேசினால் நான் நினைக்கின்றேன் இன்னும் அதிகமாகும்.மிகப் பெரும்பாலான இடங்களை மக்கள் வெற்றிபெற வைக்கின்ற போது மாற்றுத் தலைமையினுடைய பேச்சு இல்லாமல் போகும் என நினைக்கின்றேன் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் கூட்டமைப்பில் நிகழும் பலத்த விருப்பு வாக்கு போட்டி விளைவாக சிலர் தோற்கடிக்கப்படும் பட்சத்தில் வெளியில் உள்ள சுமந்திரன் அதிருப்தியாளர்களை உள்ளே கொண்டு வர திட்டமிடுவதாக தெரிகின்றது.தவிர மாவை-சரவணபவன்- சசிகலா நடராஜா கூட்டணி க்கும் சுமந்திரன் – சிறிதரன் கூட்டணிக்குமான அதிகார போட்டியே இன்று இறுதியில் விஞ்சி நிற்கின்றது.மாவை கூட்டணி இத்தேர்தலில் தோற்கடிக்கபட்டால்,சுமந்திரன் அணி இலகுவாக தமது அதிகாரத்தை நிலைநிறுத்தி கொள்ளும்,வெளியிலுள்ள பல கட்சிகள் இடையிலான பலத்த போட்டியை சமாளிக்க முடியாது என நன்கு உணர்ந்து கொண்ட கூட்டமைப்பினர்,தமக்கு கிடைக்க போகும் விருப்பு வாக்குகளுக்காக பிச்சைக்கார்கள் போல் சண்டை பிடிப்பதை பார்த்தால்,இவர்களின் இறுதி காலத்தை நெருங்கி வருகின்றார்கள் என்பது கண்கூடு.. தமிழர்களே மாற்றத்துக்காக வாக்குகளை அளியுங்கள் அல்லது தேர்தலை புறக்கணியுங்கள்.மாற்றம் வரும்