10 கட்சிகளுடன் இணைந்து செயல்பட தயார் – மாவை!

125

ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் 10 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவது குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கட்சிகளின் தீர்மானத்திற்கு அமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் நேற்று நிர்வாகமுடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நேற்றைய நிர்வாக முடக்கல் போராட்ட வெற்றி தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட போதே மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார்.

அதேநேரம், 10 கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஒத்துழைப்பு மூலம் இந்த வெற்றி கிட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.