சீனாவை சிதைத்த சிட்டுகுருவி புரட்சி

123

சிட்டுக்குருவி புரட்சி..!

சீனாவில் 1958 தொடங்கி 1962 வரை நடைபெற்ற ஒரு மோசமான வரலாற்று நிகழ்வு..!

கம்யூனிச நாடாக சீனா மாவோ தலைமையில் உருவான பிறகு தொழில்துறை..உணவு உற்பத்தி போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டது..

உணவு தானியங்களை சிட்டுக்குருவிகள் அதிகமாக தின்றுவிடுவதால் தாங்கள் நினைத்த உற்பத்தி அளவை எட்ட முடியவில்லை என்பதற்காக சீனாவில் இருந்த ஒட்டுமொத்த சிட்டுக்குருவிகளையும் கொல்ல உத்தரவிட்டார் மாவோ..!

இராணுவ வீரர்கள் முதல் சாமானிய மக்கள் வரை எல்லாரும் களத்தில் இறங்கி சிட்டுக்குருவிகளை வேட்டையாட தொடங்கினர்..மரங்களில் ஏறி குருவிக் கூடுகளையெல்லாம் பிய்த்தெறிந்த மக்கள் கூட்டம்.. கொன்ற குருவிகளை கழுத்தில் மாலையிட்டுக் கொண்டும் வண்டி நிறைய ஏற்றிக் கொண்டும் ஊரெல்லாம் சுற்றி கும்மாளமிட்டனர்..

சரியான தரவுகள் இல்லையென்றாலும் சற்றொப்ப பத்து கோடி சிட்டுக் குருவிகள் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது..!

சிட்டுக் குருவிகளை அழித்து விட்டால் உற்பத்தி அதிகரிக்கும் என்ற மாவோவின் திட்டம் பலிக்கவில்லை..!

சிட்டுக்குருவிகள் அழிந்ததன் விளைவாக வெட்டுக்கிளிகளும் இன்னும் பல பூச்சியினங்களும் வரம்பின்றி பெருகத் தொடங்கின..ஒட்டுமொத்த உணவுப் பயிர்களையும் பூச்சிகள் அழித்தொழித்தன..

விளைவு.. சீனாவில் வரலாறு காணாத பஞ்சம் தலைவிரித்தாடியது..அடுத்த மூன்று ஆண்டுகளில் பட்டினியாலும்..வேலையின்மை..உள்நாட்டு கலகங்களாலும் சீன மக்கள் நான்கு கோடிக்கும் அதிகமானோர் இறந்தனர்..!

கம்யூனிசமும் முதலாளியமும் இயற்கை வளச் சுரண்டலிலும் இயற்கை ஒழுங்கை சிதைப்பதிலும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல..!

இன்றைக்கும் இதுதான் நடக்கிறது..அமெரிக்கா பத்து மரங்களை அழித்து ஒரு ஆலையை நிறுவினால் சீனா நூறு மரங்களை அழித்து பத்து ஆலைகளையாவது அமைத்து அமெரிக்காவைத் தோற்கடிக்க வேண்டும் என்றே எண்ணும்..!

நம் ஊரிலும் சிலர் சீனாவின் பாதையே எமது பாதை..! மாவோவே எமக்கும் தலைவர் என்று கிளம்பினார்கள்..!

நல்வாய்ப்பாக..அவர்கள் நிலக்கிழார்களை கொன்றதோடு நிறுத்திக் கொண்டார்கள்.. சிட்டுக்குருவிகளின் மேல் கை வைக்கவில்லை..!

நன்றி ஆரல்கதிர் மருகன்