இந்த உலகம்,பிரபஞ்சம் எல்லாமே இருமை இயல்பில்தான் இயங்கி கொண்டுள்ளது.எல்லாமே இரண்டு இரண்டாக இருக்கும்.ஆனால் அவை ஒன்றை ஒன்று பற்றியே காணப்படும்.அதில் ஒன்று மாறாமல் இருக்க,அந்த மாறாததை பற்றி மாறுகொண்டிருப்பது இயங்கிகொண்டிருக்கும். இங்க இந்த பிரபஞ்சத்தில் இருக்கிற அத்தனையுமே அந்த இயல்புக்குள் அடங்கும்.உதாரணத்துக்கு கார் சில்லை எடுத்து கொண்டால்,அச்சு மாறாமல் அப்படியே இருக்கும்,சில்லு அதனை பற்றி சுத்தி கொண்டிருக்கும்.அது போலவே இருள் நிலையாக இருக்க,அதை பற்றி ஒளி சுற்றிகொண்டுள்ளது.
மனிதர்களும் இவ்வாறே,அவர்களிடத்தில் உள்ள மாறாத ஒன்றை பற்றி மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கும்.இரண்டும் சேர்ந்து பற்றி இயங்கி கொண்டே இருக்கும்.மாறாத சக்தியை பற்றி மாறிகொண்டிருக்க கூடிய சடம் இயங்கிகொண்டுள்ளது.அதுதான் பிரபஞ்ச இயங்கியல்! மாற்றங்களை பார்த்து நாம் காதலிக்கும்,காதலிக்கப்படும் போது,அவை மாற்றத்துக்குள்ளாகின்றன.மாறாததை பற்றி மாற்றங்களே இருப்பதால்..மாற்றங்கள் மாறாததை மறைத்து கொண்டுள்ளன! இத்தனை மாற்றங்களையும் தாண்டி அந்த மாறாததை பற்றி காதலிக்கப்படும் போது நீங்கள் பிரபஞ்சத்தில் ஐக்கியமாகிவிடுகிறீர்கள்,இதனால்தான் உங்களிடம் உங்களுக்கே ஒரு பற்று கொண்டு வாழ்க்கையை அமைத்து கொள்கிறீர்கள்.ஏனெனில் பிரபஞ்சத்துக்கு தெரிந்த மொழி காதல் மட்டுமே.அது உங்களை நீங்களே காதலிப்பதில் ஆரம்பித்து,மொத்த பிரபஞ்சத்தின் மாறாத அந்த இயல்பை காதலித்து பின்னர் மாறாத நிலையை அடையவே நிலையான ஒவ்வொரு கணமும் இயங்கிகொண்டுள்ளது.