ஈழத்தில் படுகொலையான 35 க்கும் மேற்ப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலைகளுக்கு இன்னமும் நீதி கிட்டவில்லை.. விசாரணைகள் இல்லை… அவர்களுக்கு எங்கள் வணக்கத்தை தெரிவித்து கொள்ளும் அதேவேளை அவர்கள் இறப்புகளுக்கு நீதி கிடக்க குரல் கொடுப்போம்!

சிறிலங்காவில் இதுவரையில் 43 ஊடகவியலாளர்கள் அரச பின்னணியோடு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 35 தமிழ் ஊடகவியலாளர்களும் 05 பெரும்பான்மையின ஊடகவியலாளர்களும் 03 முஸ்லிம் (தம்மை தமிழர் என அடையாளப்படுத்தாத ) ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.

உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இந்த நாளில் வாழ்த்துக்களை சொல்வோம்!

குறிப்பாக உயிர் அச்சுறுத்தல் நடுவிலும் ஊடகப் பணியாற்றும் சிறிலங்கா போன்ற நாடுகளில் வாழும் ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு வணக்கமும் வாழ்த்துகளும்!

காலத்தை பதிவு செய்யும் காலபணியில் அறிவாயுதக் கருவி ஏந்தி அநீதியை அறுத்தெறிந்து நீதியை நிலை நாட்டும் ஊடகப்பணி பூமியை செப்பனிடும் முதன்மை பணி!

போற்றுவோம்!