மெடிக்கல் மாபியா கையில் கொரானா – பலியாகும் அப்பாவி மக்கள்

73

மலேரியாவுக்கு கொடுக்கப்படும் மருந்தான குளோரோகுயின் மருந்து கொரோனவை குணப்படுத்தும்ன்னு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லிய பிறகு, சுவீடன் அந்த மருந்தை மார்ச் இறுதியில் பயன்படுத்த ஆரம்பித்தது. அதுவரை அங்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை, ஒற்றை எண்ணிக்கையில் என்று இருந்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இப்படியாக மாறியுள்ளது…

27-மார்ச் – 28 பேர்
30-மார்ச் – 36 பேர்
31-மார்ச் – 34 பேர்
01-ஏப்ரல் – 59 பேர்
02-ஏப்ரல் – 69 பேர்
03-ஏப்ரல் – 50 பேர்
04-ஏப்ரல் – 15 பேர்
05-ஏப்ரல் – 28 பேர்
06-ஏப்ரல் – 76 பேர்

சில நாட்களுக்கு முன்பு சுவீடன் சுகாதார துறை ஆய்வு செய்ததில், இந்த குளோரோகுயின் மருந்து தீவிர இதய பிரச்னை உட்பட பல பக்க விளைவுகளை உருவாக்குவதால், உடனடியாக இதை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களுக்கு பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளது !

ஒருவேளை சுவீடன் மருத்துவ ஆய்வாளர்கள் சொல்லுவது போல இந்த மருந்தில் பக்கவிளைவுகள் அதிகம் என்றால், அமெரிக்காவில் இந்த மருந்தால் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையையும் அவர்கள் ஆய்வு செய்தார்களா என்று தெரியல…

ஆனா ட்ரம்ப் இந்த மருந்துக்காக இந்தியாகிட்ட சண்டை போட்டுட்டு இருக்காரு ! இந்த கொரோனாவால் மருத்துவர்களைவிட அதிகமாக மன ரீதியில் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் ஆளும் அரசாங்கங்கள்தான் என்று தோன்றுகிறது…