எம்மை மன்னித்து மீண்டும் இம்மண்ணில் பிறப்பீர்களா…

575

வரலாறு நெடிதிலும் இனத்துக்கு இருள் சூழ்ந்த நேரங்களில் ஒளியாகிய தலைவர்கள்,வீரர்களை தமிழர் சமூகம் எவ்வாறு தோற்கடித்தது என்பதையும் எதை இந்த இனம் பொதுபுத்தியில் விதைத்தோ அதையே இன்று அறுவடை செய்து கொண்டிருக்கின்றது.இயற்கையின் சக்தி பாய்ச்சலின் படி நீதி வேண்டும்,பெருந்துன்பங்களில் இடறும் மக்கள் குழுக்களை காக்க,அவர்களை சமப்படுத்தும் முகமாக காலத்தினால் பெரும்தலைவர்களும் அவர்களுக்கு பொருத்தமான வீரர்களும் அந்த சமூகத்தில் இருந்து வெளிவருவார்கள்.அவர்கள் தமக்குள் ஒன்றிணைந்து அந்த இனத்துக்காக போராடுவார்கள்.அவர்களால் மக்களில் மாற்றம் வருவது போலவே,மக்களாலும் அவர்களில் மாற்றம் வரும்,தம்மை தாமே அழிக்க துணியும் இனம்,முதலில் தமது பாதுகாவலர்கள் தமக்காக போராடுபவர்களை ஏதோ ஒரு வழியில் அழித்து கொள்கின்றது.பின்னர் தம்மை தாமே அழித்து கொள்கின்றது.இயற்கை நீதிப்படி இதில் இனத்தை மொத்தமாக அழியாமல் கொண்டு நடத்த அதன் சிதறிந சில துகள்கள் உலகம் முழுதும் பரவி ஆங்காங்கே வாழ்ந்து கொண்டிருக்கும்.இனம் வெடித்த இடத்தில் மீதியாக இன்று இருப்பது வெறும் கழிவுகள்

வெறும் கழிவுகள் எல்லாம் சேர்ந்து தமக்கென்று சில கழிவுகளை பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து கொள்ளும்.அந்த பிரதிநிதி கழிவுகள் அநீதிக்கு துணை போகிறவர்களாக இருப்பார்கள்.அதை தேர்ந்தெடுத்த கழிவுகள் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்.காரணம் அநீதியாளர்களை தேர்ந்தெடுத்தவர்கள் இதே மக்கள் கூட்டம்தான்.அதனால் அமைதிகாத்து அநீதிக்கு ஆதரவாக இருந்துகொள்வார்கள்.இதே இனத்தின் வீரபிறப்புக்கள்,ஒரு காலத்தில் தம் குடும்பங்களை விட்டு வேலைகளை உதறிவிட்டு விடுதலை போரில் தம் உயிரை துச்சமென தூக்கி கொடுத்திவிட்டு காவியமானார்கள்.இன்று அதே இனத்தின் கழிவுகள்,வெறும் வேலைவாய்ப்புக்களாக,இனத்தை உள்ளிருந்து அழிக்க உதவிய,இனி அழிக்க போகின்றவர்களுக்கு பின்னால் அலைகின்றது.அடுத்தவருக்கு ஆயிரம் அட்வைஸ்களை அள்ளி வழங்குகின்ற இந்த இனம் அந்த ஆயிரத்தில் ஒன்றை கூட தாம் கடைபிடித்ததில்லை.

தங்களுக்குள் தனிதனியாக பிரிந்து தமது தனிப்பட்ட நலன்களை மட்டும் எண்ணி அதற்காக எந்த எல்லைவரை எவன் காலிலும் விழுந்தும் காக்கா பிடித்தும் அதனை சாதித்து அதன் பின்னர் வீண்பெருமை பேசி பொழுதை வீண்டித்து கொண்டே இருக்கும் இந்த இனத்தில் சில வீரர்கள் இருந்தார்கள்,அவர்கள் தமகென்று ஒரு தலைவரை கண்டு கொண்டனர்.மொத்த உலகமும் கூடவே ஈன தமிழரும் எதிர்க்க வீரஞ்செறிந்த ஒரு போரை நடாத்திகாட்டிய வீர பிறப்புக்கள் விடைபெற்ற கணங்களே,இந்த இனத்தின் அழிவுகளுக்கான ஆரம்பங்கள்.இன்று இந்த கழிவுகள்,தமக்கான கழிவுகளை தேர்வு செய்து தமது முடிவை தாமே தேடிகொண்டிருக்கின்றன..அழிவு பாதாளத்தை நோக்கி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கும் இவர்களை காப்பாற்ற நினைப்பது மடைமைதனம்,காப்பற்ற நினைப்பவர்கள் இவர்களுடன் சேர்ந்து அழிந்து போவார்கள் அல்லது இவர்களால் அழிந்து போவார்கள்,இங்கு இவர்கள் அழிந்து இதன் பின்னர் புதிதாக நம் இனம் பிறக்கும்,அங்கே நம் மானமாவீரர்களும் நம் மண்ணில் மீண்டும் வந்து பிறப்பார்கள்….