பிரித்தானியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..

93

பிரித்தானியாவில் ஒரே பாடசாலைச் சேர்ந்த ஐந்து ஆசிரியர்களுக்கு கொரோனா: பாடசாலை மூடப்பட்டுள்ளது.அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை.மாணவர்கள் பாடசாலை திரும்பி வரும் நிலையில் பிரித்தானியாவிலுள்ள பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஐந்து ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பிரித்தானியாவின் Haverhill நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் பணிபுரியும் ஐந்து ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் சிலர் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள். எனவே அந்த பாடசாலை மூடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மூடப்பட்ட பாடசாலை நாளை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.9 மற்றும் 11ஆம் ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் இன்றுதான் முதல் நாளாக பாடசாலைக்கு திரும்பியுள்ள நிலையில், அவர்கள் உடனே வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுகாதார அதிகாரி உறுதி.

பிரித்தானியாவில் 3,000 புதிய
கொரோனா வைரஸ் வழக்குகளை அண்மித்துள்ளது.சனிக்கிழமையன்று, பிரித்தானியாவில் 1,813 வழக்குகள் பதிவாகியுள்ளன. பிரித்தானியாவில் ஞாயிற்றுக்கிழமை 2,988 புதிய கொரோனா வைரஸ் வழக்குகளைப் பதிவு செய்தது.
இது மே 23 க்குப் பிறகு மிக உயர்ந்த பாதிப்பாக பதிவாகி உள்ளது.
இதன்மூலம் மொத்த பாதிப்பு 347,152 நோய்த்தொற்றுகளாக உள்ளது.
எவ்வாறாயினும், இறப்புகளின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் இருந்தது, ஞாயிற்றுக்கிழமை இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.அரசாங்க தரவுகளின்படி, பிரித்தானியாவில் குறைந்தது 41,551 பேர் வைரஸால் இறந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News by eelamranjan