மேஜா் வாணி

118

ஆண்டுகள் ஆனாலும் ..
நினைவுகளால் வாழந்துகொண்டிருக்கும் அன்புச் சகோதரியே..

சிறு வயதிலிருந்தே இறுதிவரை தன்னலமின்றி உழைத்த உறவே..
கடமையில் கண்ணியம்..
எதிலும் சளைக்காத உள்ளம் கொண்டவளே.. உன் திறனை வடிக்க வார்த்தைகள் போதாது..
ஒரு கூட்டு உறவுகளாய்
வாழ்ந்த.. காலங்கள்..
ஒரு தட்டில் உணவுண்ட ஞாபகங்கள் எல்லாமே
இப்போ அலைமோதுகின்றன…வலிகளாய்
இனி எப்போ காண்போம் உங்கள் பூமுகம்?

உறவுகளை இழந்த துயரில்
எனக்கு ஆறுதல் தந்தாயே..
உன் பிரிவுத் துயரையும் சுமப்பேனென்று..நினைத்திருக்கவில்லை.. நொடிப்பொழுதுகளில் எல்லாமே நடந்தாகியது..

தொலைவில் இருந்த உன் அம்மாவுடன்
தொலைபேசியில் கதைக்க
ஆசைப்பட்டாயே அன்றைய நாள்
அதுதான் உன் இறுதிக்கணமென்று
உனக்கே விளங்கியதோ என்னவோ
சொற்ப நேரத்திலே எல்லாமே கனவாய் முடிந்தது..
உன் பிரிவுத் துயர் தான் காத்திருந்தது
எப்படி மறப்பது அந்த நாட்களை?
துயரோடு துயர் சுமந்த வலி நிறைந்த நாட்கள்.🙏🌹🙏

-சகதோழி-