மோடி பெயரில் நடந்த கொரானா பெரும் நிதி மோசடி

107

ஒரு தேசியப் பேரிடர் நேரிடுகிறது. அதன் மீட்பு பணிகளுக்கு முடிந்தளவு நிதி தாருங்கள் என்று பிரதமர் கேட்கிறார். நிதி அனுப்ப வேண்டிய தளத்தையும் வெளியிடுகிறார். அதன் முகப்பிலிருந்து எல்லாவற்றிலும் பிரதமரின் முகமே தெரிகிறது. அதன் பெயரே PM CARES. உங்களுக்கு இயல்பாக தோன்றுவது என்ன? இது மத்திய அரசின்/பிரதமரின் அதிகாரப்பூர்வ நிதித் தளம் என்பதுதானே? இது வழக்கமான எல்லா நாடுகளிலும் மாநிலங்களிலும் உள்ள நடைமுறை தான் இல்லையா?

பணமும் மனமும் உள்ளவர்கள் தங்களால் இயன்றளவு தொகையை இந்த பேரிடருக்கு எதிரான போருக்காக தருகிறார்கள். கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடிகளுக்கு மேல் நிதி குவிகிறது. இதில் அரசுத்துறைகளிலிருந்து வந்த நிதிகளும் அடங்கும். அரசு ஊழியர்களின் சம்பளங்கள் பிடிக்கப்பட்டு அந்த பணம் PM CARES க்கு நிதியாக திருப்பிவிடப்பட்டுள்ளது. அப்படி சம்பளத்தை தர விருப்பமில்லாத அரசு ஊழியர்கள் அதுபற்றிய விளக்கத்தையும் காரணத்தையும் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சரி இப்படி வசூலிக்கப்பட்ட நிதி எப்படி செலவு செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம் என்று யதேச்சையாக பிரதமர் அலுவலகத்திடம் கேட்டால் அதிர்ச்சிகரமான ஒரு பதில் வருகிறது.

PM CARES என்பது அரசாங்க அமைப்போ பிரதமரின் அதிகாரப்பூர்வ தளமோ அல்ல. அது ஒரு தனியார் தொண்டு நிறுவன அமைப்பு. அதன் வரவு செலவு குறித்த விவரங்களை வெளியில் சொல்ல முடியாது என்று.

இது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்? யோசித்துப் பாருங்கள். ஒரு உயிர்கொல்லி நோயின் பெயரால் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து பின் அது அரசாங்கத்தின் கைகளுக்கே சென்று சேரவில்லை என்றால் அதற்கு நிதியளித்த உங்களுக்கு எப்படி இருக்கும்? அதுவும் அரசு ஊழியர்களிடம் அடித்துப் பிடுங்காத குறையாக நிதியை வாங்கிக் கொண்டு ஒரு தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்ப்பது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?

கொரோனாவிற்கு எதிராக நிதி திரட்ட வேண்டுமென்றால் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்புமாறு கேட்காமல் இப்படியொரு தனியார் நிறுவனத்திற்கு பணம் தருமாறு கேட்டது ஏன்? அதற்கு PM CARES என்று அரசின் அதிகாரப்பூர்வ பதவியை பெயராக வைத்தது ஏன்? அதற்கு அரசு ஊழியர்களின் பணத்தை வலுக்கட்டாயமாக பறித்தது ஏன்? அது அரசு நிதியாக இல்லாவிடினும் அதில் போடப்பட்ட பணம், நாட்டின் பிரதமரின் மேல் நம்பிக்கை வைத்து போடப்பட்ட பணம் தானே? அதுவும் குறிப்பாக கொரோனா மீட்புக்காக மட்டும் போடப்பட்ட பணம் தானே? பின் அதன் வரவு செலவுகளை வெளிப்படையாக அறிவிக்க ஏன் இந்த தயக்கம்? ஏன் பிரதமர் அலுவலகம் மறுக்கிறது? மறைக்கிறது?

சில மாதங்களுக்கு முன்பு பார்த்த ஒரு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது. ஒரு சர்க்கரை பாக்கெட்டின் முன்பக்கத்தில் கொட்டையாக Natural Brown Sugar என்று போடப்பட்டிருக்கும். ஆனால் பின்பக்கம் சிறியதாக இன்னொன்று எழுதப்பட்டிருக்கும். இதில் Natural என்பது இயற்கையை குறிக்காது. அது ஒரு நிறுவனம். அந்த நிறுவனம் தயாரிக்கும் Brown Sugar தான் Natural Brown Sugar என்று போட்டிருக்கும்.

இந்த Natural Brown Sugar க்கும் PM CARES க்கும் என்ன பெரிய வித்தியாசம்?

Hasmi

இந்திய எடுபிடி பிரதமர் மோடி இதற்கு முன்னரும் அம்பானி என்ற இந்திய மக்களை ஏப்பம் விட்டு உழைத்த பெருமுதலாளியின் ஜியோ சேவைக்காக மோடி படத்தை போட்டு விளம்பர செய்தமையும் குறிப்பிடதக்கது.முற்று முழுதாக காப்பரேட் ஊதுகுழலாக இருக்கும் மோடியை அவர்களே பிரதமராக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.மோடி தன்னை தேர்ந்தெடுத்த அவர்களுக்காக வேலை செய்கிறார்.அவர்களின் இருப்புதான் மோடிக்கு நம்பிக்கை தருகின்றது.சாதாரண மக்கள் செத்தால் என்ன இருந்தால் என்ன? இங்கே பிரதமர்களை மக்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று காட்டப்படுவதுதான் மிகப்பெரிய வேடிக்கை