கொரானாவுக்கு எதிராக முருங்கை இலை உண்ணும் ஐரோப்பியர்கள்

231

மேற்கத்திய நாடுகளில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு மற்றும் காய்ச்சலுக்கு மொரிங்கா ன்னு ஒரு இலையை கொடுப்பதாக நிறைய தகவல்கள் வந்தது. 100 கி. பாக்கெட் 20 லிருந்து 30 டாலர். கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய்.

அந்த மொரிங்கா வேற எதுவும் இல்லை, நம்ம முருங்கை இலை தான். அறிவியல் துணையில்லாமல் இந்த மண் பல்லாயிரம் ஆண்டுகள் இயங்க முக்கிய காரணம் இந்த மண்ணில் வாழுகிற விலைமதிப்பற்ற உயிர்கள். அந்த உயிர்களின் பட்டியலென்பது நமது தமிழ் இனம் மாத்திரமல்ல, இந்த மண்ணில் விளைகிற மரம் செடி காய் கனி மூலிகைகள் எல்லாம் சேர்ந்ததே.

மனித இனம் வாழ ஆதாரமாய் இருக்கும் ஒவ்வொரு சிறு செடியும் மனிதர்களைப் போல பாதுகாக்க படவேண்டிய ஒப்பற்ற ஒரு உயிர் தான். இந்த மண் ஒரு வரம். அத்தகைய பல்லுயிர்கள் இல்லாமல் ஒரு சமூகம் அதன் மண்ணில் நீண்ட காலம் உயிர்ப்போடு இயங்கவே முடியாது.

நமது மண்ணிற்கு சொந்தமான நமக்கே உரித்தான அவைகளை இழப்பது என்பது நமது மண்ணையும் இந்த மண்ணில் வாழும் இனத்தையும் இழப்பதற்கு சமம். நமக்கான நம்மோடு உறவாடி நம்மோடு வாழும் இயற்கையை புரிவோம். புரிந்தால் மட்டும்தான் அவைகளை பாதுகாக்க முற்ப்படுவோம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லுயிர் ஒம்புதலை உலகுக்கு சொன்ன இனம் என்கிற பெருமையை மறவோம்…

உவரி அனிதன்