
அண்டத்தில் இருக்கும் எல்லா பொருட்களும் ஈரியல்பு தன்மையின் அடிப்படையில் தான் இயங்கிக்கிட்டு இருக்கு…அதாவது துகள் மற்றும் அலை பண்புகள்..இது குவாண்டம் இயக்கவியல் மூலம் தெளிவாகிறது.அணுக்களால் உருவான எந்தவொரு பொருளுக்கும் இது சாத்தியமான ஒன்னு தான்..அதன்படி மனிதனும் இதன் கீழ் தான் இயங்கனும்…இந்த ஈரியல்பு விதியில் இயங்கும் பொருள் துகளாக இயங்கினால் கட்புலனாகும் அளவிலும்,அலையாக இயங்கினால் கட்புலனாக வகையிலும் இயங்கும்…மனிதன் உயிரோடு இருக்கும் போது இவ்விரு தன்மைகளை கொண்டிருந்தாலும் துகள் நிலையில் மட்டுமே இயங்க முடியும் ஏனென்றால் மனித மூளை ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே உணர கூடியது..இதுவே ஒரு மனிதன் அலை வடிவில் இயங்கினால்??? – அவன் ஒரு super human ஆக உருவெடுப்பான்..அவனால் எதையும் எங்கும் எப்போதும் இயக்க முடிகின்ற அளவிற்கு வல்லமை படைத்தவன் ஆகிவிடுவான்..இதற்கெல்லாம் முட்டுகட்டு போடும் வகையில் அமைந்தது தான் துகள் தன்மை அதாவது உடல் நிலை..
ஒருவனது ஆன்மா(அலை) உடலை(துகளை) விட்டு வெளியேறிய பின் அலையாக மட்டுமே இயங்க முடியும் இந்த நேரத்தில் தான் நான் சொன்ன super human நிலைக்கு செல்லலாம்..ஆனால்,துகளை கைப்பற்ற இயலாத காரணத்தால் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே அந்த அலை சுற்றி திரியும்…இதை தான் கிராமத்தில் காத்து(அலை),கருப்பு ன்னு சொல்லுவாங்க..
இப்படி அலையாக எங்கும் பரவி கிடக்கும் ஆன்மாக்களை வணங்கும் பழக்கம் பழங்காலம் முதல் இருந்து வருது.. குறிப்பிட்ட சில காரணத்தால் இறந்த ஆன்மாக்களை மட்டுமே வணங்குவாங்க..
இப்படி அலையாக (காற்றாக) இருக்கும் அந்த ஆன்மாவை அழைத்து ஒருவரது உடலுக்குள் இறக்கி..துகள் நிலையை உணர செய்வார்கள் அதாவது self consciousness ஐ கொடுத்து தங்களுக்கு வேண்டிய கோரிக்கைகளை முன்வைத்து பின்னர் அந்த துகளுக்கு தேவையானவற்றை தந்து அனுப்பி விடுவார்கள்…குறிப்பிட்ட எல்லைக்குள் பரவி கிடக்கும் அந்த அலை அங்குள்ள மக்களின் தேவைக்கேற்ப எல்லைக்குள் வேறு ஆற்றல்கள் நுழையாமலும், வேளாண்மை சிறக்கவும், மழை வேண்டியும் அவர்கள் கேட்டவற்றை நிகழ்த்தும்…மழை பொழிய செய்தல்,வேளாண்மை பெருக்கம் என்பது குவாண்டம் உலகில் சாத்தியமானது…இதற்கு அங்கு அலையாக செயல்படும் ஆன்மாவே காரணம்..
இதை தவறான வழிகளிலும் பயன்படுத்த கூடும் ஏவல் காரியங்களுக்கு இது போன்ற அலையாக சுற்றி திரியும் ஆன்மாக்களை பிடித்து தங்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து கொள்ளவும் செய்கிறார்கள்..
குறிப்பிட்ட விபத்திற்கு பின்னர் சில ஊர்களில் மழை பொலிவு குறைந்ததாகவும்,விவசாயம் முடங்கியதாகவும் சொல்லப்படும்..அதே சமயம் சில கிராம அம்மன் கோவில்கள் வேளாண்மை செய்யும் களத்து மேட்டின் நடுவிலே அல்லது கண்மாய் கரைகளிலோ அமைந்திருப்பதையும் தொடர்புபடுத்தி பாத்துக்கோங்க..
இதே உயிரோடு இருக்கும் போது இது போன்ற அலை இயக்கம் என்பது அசாத்தியமான ஒன்று தான்…இதை சாத்தியப்படுத்தும் வகையில் சில செயல்கள் நடந்து கொண்டு தான் இருக்கு…ஆனால் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்…
இன்னும் சிலர் தங்கள் வீட்டில் இறந்த கன்னிப்பெண்களை தோட்டத்தில் நடுகல் வைத்து வழிபாடு செய்வார்கள்… இது அவர்களின் தோட்டத்தை காக்கவும்,மண் வளர்ச்சிக்கும் உதவும்
சில பேய் படங்களில் பேய்கள் TV போன்ற மின் சாதனங்களையும் கட்டுப்படுத்தும் அதே சமயம் மரம் செடி போன்றவற்றையும் கட்டுப்படுத்தும் மேலும் காற்று வாக்கில் மேலிருந்து கீழிரங்கும்,எங்கு ஓடினாலும் முன்வந்து நிற்கும்,ஒரே நேரத்தில் இரு இடங்களில் இருக்கும்…..இதெல்லாம் குவாண்டம் அறிவியலின் அடிப்படையில் சாத்தியமானதே…
இதை மேலை நாட்டினர் நிரூபிக்கும் வரை இது ஒரு Pseudoscience தான்.
– Praba Roose