நவீன தொடர்பாடல், உலக சுற்றளவை உள்ளங்கைக்குள் அடக்குவதுபோல வந்துவிட்து. அவுஸ்ரேலியாவில் உள்ள பேத்திக்கு குழந்தை பிறந்து 5 நிமிடங்களில்; பின்லாந்தில் உள்ள பாட்டிக்கு, கைத்தொலைபேசியில் படம் எடுத்து முகநூலில் (Facebook) இல் தரவேற்றம் செய்து அனுப்புவதோடு, அவவோடு கதைக்கக்கூடியதாகவும் உள்ளது.
நாம் இல்லாநாடு இல்லை, ஆனாலும் நமக்கென ஒருநாடு இல்லை என்று (பரதேசிகள் போல) பரந்திருக்கும் நாம் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதற்கும், எமது ஒன்றுவிட்ட சகோதரத்தின் பிள்ளைகளையும், அவர்களின் விருப்புவெறுப்புக்களையும், எமது பிள்ளைகள் கூட அறிந்து கொள்வதற்கும், முகம் பார்த்து உறவாடுவற்கும் நவீன தொடர்பாடல் உதவுகிறது. எல்லாம் நன்றாக இருந்தாலும் ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை என்ற மாதிரி இதன் உபயோகத்தை பிரயோசனமாகக் பாவிக்காது. சுடுதண்ணிக்குள் கை வைத்தவர்போல அவதிப்படும் குடும்பங்களும் உண்டு.
முகநூலில் தோட்டம் செய்வது, பிராணிகள் வளர்ப்பது என்ற விளையாட்டில் தம்மை மறந்து மணித்தியாலக் கணக்கில் ஈடுபடும், பெண்கள் அதிகம். வீட்டில் உள்ள தோட்டத்தைப்பராமரிப்பதை விட முகநூலில் உள்ள தோட்டத்தை பராமரிப்பதற்கும், தண்ணிவிடுவதற்கும், காய்கறி ஆய்வதிலும், மருந்து அடிப்பதிலும் அதிகமான நேரத்தை செலவழிப்பதோடு, தோட்டவேலைக்கு உதவிசெய்வதற்கு என மற்ற முகநூல் நண்பர்களுக்கும் அழைப்புவிடுகிறார்கள். புலம்பெயர் நாடுகளில் இப்படி நேரத்தை செலவழிப்பது நாகரீகம் என்று நினைக்கிறார்களோ என்னவோ.
இதைவிட சிலர் தமது பெயரில் முகநூல் ஒன்றைத்திறந்து வைத்திருப்பதோடு, தொழில்நுட்ப அறிவு இல்லாத தனது மனைவி அல்லது கணவன் பெயரிலும் முகநூல் ஒன்றைத்திறந்து, அதையும் தாமே நடத்துகிறார்கள். குடும்பத்தில் ஏன் வீண்பிரச்சனை என்று மற்றவர்பேசாமல் இருந்தாலும், உண்மையில் இது ஒரு அடையாளத்திருட்டுக்குச் சமமானது. ஏனெனில் இதில் அவர் கருத்துச்சொல்லும் போதும், விருப்பம் (டமைந) போடும் போதும் மற்றவர்கள் அவர்களது மனைவியோ அல்;லது கணவனோ போடுவதாகவே நினைப்பார்கள். இது சில குடும்பங்களில் தேவையில்லாத பிரச்சனைகளுக்கு காரணியாகுகிறது.
அத்தோடு இந்த முகநூல் மூலமாக பழைய நண்பர்களைக் கண்டுபிடித்து அவர்களோடு உரையாடுவது ஒரு நல்ல விடையமாக இருந்தாலும், சில இடங்களில் பழைய பள்ளிக்கூட காதலையும், முன்பு சொல்லாமல் விட்ட காதலையும் இப்போ சொல்லி அத்தோடு விடால் 40, 50 வயதில் அதற்கு பாட்டு போட்டு, அதற்கு மற்றவர் டமைந போட்டு 16 வயது போல சிலர் அடிக்கும் லூட்டிகள் தாங்கமுடியாமல் தள்ளாடும் குடும்பங்களும் உள்ளன. உலகஅளவில் இந்த முகநூல் மூலம் எத்தனையோ பிரயோசமான விடயங்களையும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, எழுச்சிகள், வெகுசன விழிப்பு என்று செய்யக்கூடயதாக இருந்தபோதிலும், எம்மவர் சிலர் அதை உபயோகிக்கும் விதத்தில் இன்னும் சிலர் அதை வெறுக்கும் அளவிற்கு நடந்து கொள்கிறார்கள். ஒரு மனோதத்துவ நிபுணர் சொன்னார் அது அவர்களுக்குள்ளே இருக்கும் மனம்விட்டு பழக ஆட்இல்லாத தனிமையும், மற்றவர்களின் கவனத்தை தன்மேல் ஈர்பது, நடைமுறைவாழ்க்கையில் எதிர்கொள்ளவேண்டிய பிரச்சனையில் இருந்து தப்பிக்கொள்ளும் மனோநிலை, தன்னிரக்கம், வேலைபளுவில் இருந்து கொஞ்சநேரம் மனதை இலகுவாக வைத்திருந்தல் போன்றவற்றுக்காக இப்படியான சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.
அத்தோடு முகநூலில் ஒருவரின் விருப்புவெறுப்புக்களையும், நடை உடை பாவனைகளையும், கருத்துக்களையும் அறியக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதால், தங்களின் விருப்பு வெறுப்புக்களோடு ஒத்துவரும் ஒருவர்மேல் வரும் அதிக ஈர்ப்பினால் அவர்களை Virtualலாக தொடர்ந்து எல்லாவற்றிற்கும், “Comment”, “Like” போட்டு, அவர்களோடு chat இல் வேறு, எல்லாத்தனிப்பட்ட குடும்பப்பிரச்சனைகளையும் பகிர்ந்து கொள்கின்றனர். பிறகு காலம் செல்ல, இருபக்கமும் இப்படி கருத்து பகிர்வு இல்லாது, அது ஒருபக்கமாக இருக்கும் போது கவலை கொள்ளல். இருபக்கமும் இருக்கும் போது அதை இரகசியமாக வைத்திருப்பதா? அல்லது மற்றவர்களுக்கும் சொல்வதா என்ற தயக்கம், அத்தோடு இப்படியான எசைவரயட உறவை, நடைமுறை உறவோடு என்னென்று தொடர்புபடுத்துவது என்று குழப்பம், இத்தகைய உறவுச்சிக்கலில் முக்கியமாக இளையவர்களைவிட மத்திய வயதினர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
முன்பு அவளைத் தொடுவானேன், கவலைப்படுவானேன் என்று ஒரு வாய்மொழிசொல்பதம் உண்டு. இப்போ Mouseஐத்தொடுவான்னேன், கவலைப்படுவானேன் என்று சொல்லும் அளவிற்கு கவலைப்படும், இருபாலாருக்கும் பொருந்தும்.