முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும்அவர் சார்ந்த குழுவினர் இம்முறை 18.09.2020தொடக்கம் 26.09.2020வரையான காலப்பகுதியில், தியாக தீபம் திலீபனுடைய நினைவேந்தலையோ, உண்ணாவிரத நிகழ்வுகளையோ முன்னெடுக்கமுடியாது என முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் தடைக்கட்டளை உத்தரவைப்பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு பொலிஸ் நிலைய போலீஸ் பரிசோதகர் இது விடயம் தொடர்பில், முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் AR/681/2020 வழக்கிலக்கத்தில் வளக்குத்தாக்கல் செய்ததற்கமைய, நீதிமன்றம் குறித்த தடைக்கட்டளை உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

இந் நிலையில் தலைமைப் போலீஸ் பரிசோதகர் நேற்றைய நாள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் இல்லத்திற்குச் சென்று நீதிமன்றத்தின் குறித்த தடைக்கட்டளை உத்தரவினை அவரிடம் கையளித்துள்ளார்.