முல்லையில் மீனவர் மீது கடற்படை தாக்குதல்!

88

முல்லைத்தீவில் கடல் பகுதியில் தமிழ் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் வன்முறை தொடர்கின்றது.

நேற்று முன்தினம் தொழிலுக்குச் சென்ற தொழிலாளி மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கை காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியிலிருந்து நேற்று முன்தினம் இரவு (28) கடல் தொழிலுக்குச் சென்ற மீனவ தொழிலாளி மீது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டவரால் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட மீனவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் முல்லைதீவின் கள்ளப்பாடு பகுதியினைச் சேர்ந்த 46 தொழிலாளியை இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஏற்கனவே தொடர்ச்சியாக உள்ளுர் மீனவர்களை இலங்கை கடற்படை இலக்கு வைத்து தாக்கி வருவது தொடர்பான தகவல்கள் வெளியாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.