முல்லைத்தீவில்- 126 பப்பாசி மரங்களை வெட்டி அழித்த விஷமிகள்.
முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் விவசாயி ஒருவரின் பப்பாசி மரங்கள் மற்றும் தோட்டத்தின் பயிர்களை வாளால் வெட்டி அழித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
உடுப்புக்குளம் பகுதியில் செல்லத்தம்பி முத்துறாஜ் என்ற விவசாயி சூரிய மின்கலத்தினை பயன்படுத்தி விவசாயம் மற்றும் பப்பாசி செய்கையில் ஈடுபட்டுவந்துள்ளார். நேற்று இரவு சில விசமிகள் தனிப்பட்ட காரணத்தினால் இவரின் தோட்டத்திற்குள் புகுந்து பப்பாசி பழ மரங்களை அடியோடு வெட்டி சாய்த்துள்ளார்கள்.
இதன்போது 126 பயன்தரு பப்பாசி மரங்கள்,சூரிய மின்கலம்,தண்ணீர் பைப்புகள்,முருங்கை மரம் உள்ளிட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளதுடன் நீர் பாச்சும் பைப்புக்களும் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளன.
தமிழர்களையும் அவர்களின் பொருளாதாரத்தையும் சக தமிழர்களே அழித்துகொண்டிருக்க,நாம் சிங்கள தேசத்திடமும் சர்வதேசத்திடமும் நியாயங்களை எதிர்பார்த்து கொண்டிருப்பது சரியல்ல,தமிழர்களுக்கு எதிரான தமிழரினுள் குடிகொண்டுள்ள இவ்வாறான அகசக்திகளை ஒழித்து கட்டுவதன் மூலமே நாம் அடுத்தகட்டதுக்கு நகர முடியும்.அன்றில் நாம் எதன் பொருட்டு தியாகங்கள் செய்தாலும்,அதை சுயநலமாக தமது பக்கம் திருப்பி தம் நலன்களை அடைய தமிழரில் இவ்வாறான பல கும்பல்கள் ஆங்கும் இங்குமாக சுத்தி கொண்டுள்ளன.விழிப்புணர்வுதான் விடுதலைக்கு முதல்படி – Editor