தடைகளை தாண்டி தாயகத்தில் முள்ளவாய்க்கால் நினைவேந்தல்

110

தடைகள் தாண்டி தாயக மண்ணில் ஊரடங்கு சட்ட அழுத்தங்கள் அரசால் கொடுக்கப்பட்டும் படைக்குவிப்பு, விசாரணைகள், மிரட்டல்கள் மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மக்களால் உணர்வுபூர்வமாக எழுச்சியோடு நடைபெற்றது!

முள்ளிவாய்க்கால் மண்ணில் பல்வேறு தடைகளைத் தாண்டி தொடங்கிய நினைவேந்தல்.

மே 18 தமிழின அழிப்பின் பதினோராம் ஆண்டு நினைவு கூறும் முகமாக இன்றைய நாள் வட தமிழீழம் , முள்ளிவாய்க்காலில் யாழ் பல்கலைகழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் உணர்வுடன் ஒன்றிணைந்து பேரினவாத சிங்கள மற்றும் சர்வேதேச அரசால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்காக கண்ணீர் வணக்கம் செலுத்தியுள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் காணப்படும் கொரோனா அச்சுறுத்தலின் மத்தியிலும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் நடைபெற்றுள்ளது.

3 நாட்களாக முகாமிட்டு இராணுவம் விடுத்த அச்சுறுத்தல்களுக்கு ஓர்மம் கொண்ட மக்கள் அஞ்சவில்லை!

முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்னமும் உயிர்ப்போடு மூச்சு இருக்கின்றது!

உயிர் கொல்லும் பகையே இனியேனும் உணர்வாய்!

“அச்சுறுத்தி அடிபணிய வைக்க தமிழ் மக்கள் ஒன்றும் மாக்கள் அல்ல!”