அடுத்த ஐந்து வருடங்கள்,மூன்று முக்கிய திட்டங்கள் : அசத்தும் முன்னணி

293

அடுத்த ஐந்து வருடங்களுக்கு எப்படி செயல்பட போகிறீர்கள்?

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்:-

எமது செயல்பாடுகள் மூனறு கோணங்களில் அமையும்.

#முதலாவது, கோத்தபாய அரசு கொண்டுவர எத்தனிக்கும் ஒற்றையாட்சி முறைமையான அரசியலமைப்பை மக்களிற்கான அரசியல் விழிப்புணர்வூட்டல் மூலமும் மக்கள் அணிதிரள்வு மூலமும் எதிர்ப்போம்.

அதே வேளை , தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடியவிதமாக ஒரு நாட்டுக்குள் தமிழர்களின் உரிமைகளை பாதுக்காக்கக்கூடிய விதத்தில் தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வு யோசனைகளின் அடிப்படையில் ஒரு தீர்வினை அடைவதற்கான அழுத்தங்கள், முயற்சிகளில் ஈடுபடுவோம்.

#இரண்டாவதாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட இனப்படுகொலைக்கு சிறிலங்கா அரசை பொறுப்புக்கூற வைக்ககூடிய சர்வதேச குற்றவியல் பொறிமுறை ஒன்றை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு கடுமையாக உழைப்போம்.

#மூன்றாவதாக, தமிழர் தேசத்தின் பொருளாதாரத்தையும் ஒவ்வொரு தமிழ் குடும்பத்தின் பொருளாதார பலத்தையும் நாட்டில் இருக்கக்கூடிய ஏனைய பகுதிகளுக்கு ஒப்பிடக்கூடிய அளவுக்கு சுயசார்பு பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்போடு அடைவதற்கு கடுமையாக உழைப்போம்.

அதாவது புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவுடன் முதலீடுகளை தமிழ் தேசத்தில் கொண்டுவந்து சிறிய நடுத்தர தொழிற்துறைகளை உருவாக்கும் செயற்றிட்டத்தில் ஈடுபடுவோம்.

இதனூடாக , எமது தாயகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குதல் , தமிழ் குடும்பம் ஒவ்வொன்றினதும் பொருளாதார நிலையை உயர்த்தி பலப்படுத்தல் போன்றன ஏற்படும்.