வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் இன்று புதன்கிழமை (29) யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
அத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர் .

வ்வுனாயாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களாலேயே குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நண்பகல் 12 மணியளவில் யாழ். தந்தை செல்வா நினைவுத் திடலுக்கு முன்னால் தேங்காய் அடித்து, தமது கவனயீர்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன்போதே தமது ஆதரவு சைக்கிள் சின்னத்துக்கே, மக்கள் அவர்களை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்திருந்தனர்.