கிளிநொச்சி விவேகானந்தநகர் ஸ்ரீமுருகன் ஆலயத்தில் கருவறையில் இருந்த வேல், மற்றும் எழுந்தருளும் சுவாமி முருகன், வள்ளி தெய்வானை சிலைகள் என்பன திருடப்பட்டுள்ளது.
நேற்றிரவு 24-06-2020 ஆலயத்தின் கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டு உள் இறங்கி திருடப்பட்டுள்ளது. சிலைகளுடன் ஆலயத்தின் பயன்பாட்டில் உள்ள பல பொருட்களும் திருடிச் செல்லப்பட்டுள்ளது. சுமார் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியான பொருட்கள் திருப்பட்டுள்ளன. என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு பொலீஸ் தடயவியல் பிரிவினர் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எதாவது வழிகாட்டு என்று தினமும் கடவுளை கும்பிட்டிருப்பான்.இவர்கள் எதுவும் பேசாமல் சிலையாக இருந்திருப்பார்கள்.அவனும் விடாமல் கேட்டி கொண்டிருப்பான்.பிறகு ஒரு நாள் அவனுக்கு ஞானம் கிடைத்திருக்கும்.நாங்களே சும்மாதான் இருக்கிறோம்.இவர்களை தூக்கி சென்று எதாவது காசு பார்க்கலாம்.என்று தூக்கி கொண்டு போயிருக்கிறான்.கடவுள் வாய் திறந்து பேசி இருந்தால் இப்படி நடந்திருக்காது.ஆழமாக பார்க்கும் இடத்து இதுவும் ஒரு பக்திதான்.எல்லோரும் சென்று நல்ல உடல்நலம் வேண்டும்,காசு பணம் வேண்டும் என்று வேண்ட..இந்த திருட்டு பக்தரோ நீதான் வேண்டும் என்று தூக்கி சென்றிருக்கிறார்.இதுவரை முருகனை கும்பிட்டு பலன்களை திருடிய பெரிய திருடர்களுக்களுடன் ஒப்பிடும் போது இவர் சின்ன திருடர்தான்.