சிறிதரனின் நிதி கையாடலை வெளிப்படுத்தினார் முன்னைநாள் நண்பர் முருகவேல்!

133

கிளிநொச்சி மக்கள் இம்முறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை புறக்கணிக்க உள்ளதாக, கிளிநொச்சி முன்நாள் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி முருகவேல் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள பெரும்பாலான புத்திஜீவிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்..

“கிளிநொச்சியில் உள்ள 110 பாடசாலைகளில் 90 வீதமான பாடசாலைகள் முற்றாகவே சிதைவடைந்து காணப்பட் நிலையில் மாணவர்கள் ஓலைக் குடிசைகளிலும், சிறுசிறு கூடாரம் அமைத்தும், மின்சாரம், தண்ணீர் வசதிகள் இல்லாத நிலையில்தான் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்கள்.

தனி மனிதர்களாக இருந்து வைத்தியர் சத்தியமூர்த்தி உட்பட எம்மில் சிலர் செய்த உதவிகளில் வெறும் 5 வீதத்தைக் கூட கடந்த 10 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சிறிதரன் இந்த ஏழை மாணவர்களுக்குச் செய்யவில்லை.

கடந்த 10 வருடங்களில் அரசாங்கத்திடம் இருந்தும், புலம்பெயர் மக்களிடம் இருந்தும் பலகோடி நிதி கிடைக்கப்பெற்றிருந்த போதிலும், அந்த நிதி எதற்காகப் பயன்படுத்தப்பட்டதென்கின்ற வெளிபாட்டுத் தன்மை இல்லாமல் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்கள் புறந்தள்ளப்படடிருக்கின்றார்கள். இதனால் இவர்களைப் புறக்கணிப்பதற்கு நாம் தீர்மாணித்திருக்கின்றோம் என்று கிளிநொச்சியின் முன்னை நாள் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி முருகவேல் தெரிவித்துள்ளார்.