உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்குள்ளும் உயிரினங்களுக்குள்ளும் இசை உண்டு.அதிலும் மனிதர்கள் இசையில் காட்டும் ஆர்வம் அதிகம்.கிட்டதட்ட இசைக்கு அடிமைகளாவே காதுகளில் ஹெட் செட்களை அணிந்தவாறு அங்குமிங்குமா அலைந்து கொண்டிருப்பார்கள்.மனிதர்கள் இசைக்கு இவ்வளவு அடிமையாக இருப்பதற்கு காரணம்,இசை இதயத்தை கொள்வதால்தான்,பேசும் படிக்கும் பார்க்கும் சொற்கள் மனதில் மட்டுமே பதிய,இசை இதயத்தில் பதிகின்றது.காரணம் இதயத்திடம் இசை உண்டு,உள்ளே உள்ள அந்த இசை வெளி இசைகளை கவர்ந்து இழுத்து கொள்கின்றது,ஒன்றை ஒன்றை பாதித்து பாதிக்கப்படுவது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கு பொதுவானது.மனிதர்கள் தவிர தாவர,விலங்குகள்னு இசைக்கு அடிமையாகதா எந்த உயிரும் உலகில் இல்ல,காரணம் இங்குள்ள ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு இசை உண்டு.
சுருக்கமாக சொல்ல போனால் இசை இல்லாத மனிதன் இறந்த பிணமாகின்றான்,இசை ஒருவன் உடலை விட்டு பிரிவதே இறப்பு.உலகம் இசையினால் இயக்கப்பட்டு கொண்டுள்ளது.ஆரம்ப காலங்களில் மனிதனின் இசை தாகத்தை இயற்கை அதிகமா தீர்த்து வைத்தது.மனித கூட்டம் இயற்கையில் இருந்து விலக ஆரம்பித்த பின்னர் அவன் இசை தாகத்தை தீர்த்துக்கொள்ள மனித இனத்தை நம்பியிருக்க வேண்டிய நிலை வந்தது.
மனித நாகரீகங்களுடன் சேர்ந்தே இணையாக இசையும் வளர்ந்து இன்று உலகில் அதிகமான மக்களை தன் பிடியில் கட்டி வைத்துள்ளது.இசைக்காக மனித இதயங்கள் ஏங்குகின்றது,இலகுவில் அடிமையும் ஆகிவிடுகின்றன,இசையில் எத்தனையோ வகைகள் என்று சொல்லிகொண்டாலும் அதன் அடிப்படை ஏழு ஸ்வரங்கள் மட்டுமே,அந்த ஏழு ஸ்வரங்கள்தான் உலகில் இருந்து வெளிப்படும் எல்லா இசைக்கும் அடிப்படை நாதங்கள்,உண்மையான இசையை ரசித்தல் என்பது உலகில் வெளிப்படும் அனைத்து இசைக்குள்ளும் இருக்கும் அடிப்படையான இந்த ஏழு ஸ்வரங்களை கண்டு கொள்ளுதலே ஆகும்.இயற்கையிலும் சரி பிரபஞ்சத்திலும் சரி எல்லாவற்றிலும் இருக்கும் ஒருமை தன்மையை கண்டு கொள்ளுதலையே உண்மையான அறிவாக கொள்ளவேண்டும்,மனித உடலில் காணப்படும் சக்கரங்களும் ஏழு ஆகும்,இசை ஸ்வரங்களும் ஏழு,இயங்கும் முழு மனித உடல் உயிருக்கும் அடிப்படையானது ஜீன்,அதில் பதியப்பட்டுள்ள தகவல்கள்கள் படியே ஒவ்வொருத்தரின் வாழ்க்கையும் அமைகின்றது,அமையும்.ஜீன்களில் இசை வடிவிலேயே தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளதாக நவீன அறிவியல் நிரூபிக்கின்றது.இதன் மூலம் மனித வாழ்வின் மொத்த அடிப்படையும் இதயத்துடன் சேர்த்து இசையே தீர்மானிக்கின்றது.
இசை,அதிர்வெண் என்பதே பிரபஞ்சத்தின் மொழி,உலகில் உள்ள எல்லா உயிரினங்கள் பொருட்களும் தமக்குள்ளும் சரி வெளியிலும் சரி இசை வடிவத்திலயே தொடர்பு கொண்டுள்ளன.மனித பரிமாணத்தின் வளர்ச்சியே இந்த இசை தொடர்பாடல்தான்,இயற்கையுடனாக அகதொடர்பாடல்கள் மூலமே மனிதனின் பரிணாம வளர்ச்சி இதுவரை நடைபெற்று வந்தது,இன்றைய காலகட்டத்தில் இயற்கையிலிருந்து விலகிய மனித கூட்டம் தனது தணியாத இசை தாகத்தை செயற்கை முறையிலாக தீர்த்துகொள்ள விழைந்து பின்னர் அதுவே டிஜிட்டல் இலத்திரனியல் இசையாக மாறி ஏற்கனவே கோர்க்கப்பட்ட இசைகளை மேலும் மேலும் கோர்த்து கலந்து இன்றைய நவீன இசையாக உருவாகியுள்ளது,மனிதர்களின் அடிப்படை அலகான உள்ளிருந்து இயக்கும் இயற்கை இசைக்கு இந்த செயற்கையான இசை ஒத்து கொள்வதில்லை,அதிலும் டிஜிட்டல் இசை மனித மூளையை அதிகமாக பாதிப்பதுடன்,அதன் செயல்திறனை அதிகமாகவும் பாதிப்பதாக நவீன விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இசை இலகுவில் இதயங்களை கண்ணீர் சிந்த வைப்பதுடன்,வெளி மனதுக்கு தெரியாதளவு பாதிப்புக்கள் மாற்றங்களை உங்களுக்குள் ஏற்படுத்தி விடுகின்றது,உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் உங்களின் வாழ்வின் மிக முக்கிய சம்பவங்களை நினைவுபடுத்துவதாகவே இருக்கும் என்கின்றது இன்னொரு ஆய்வு,இவ்வாறாக உலக இயக்கம் இசைக்கு ஊடாகவே நடைபெற்றுகொண்டுள்ளது..
மேலைத்தேய மக்களின் அதீத இலத்திரனியல் அடிமைதனம் அவர்களை ஒரு கட்டத்துக்கு மேல் இருக்க விடுவதில்லை,அவர்களின் வாழ்வியல் முறைக்கு அந்த இயற்கை இசையின் தேவை அதிகமாக இருப்பதால்,அவர்களை அவற்றை தவறிகொண்டிருப்பதால்,அதிகமாக தங்கள் ஓய்வு நாட்களை இயற்கையில் கழிக்க விரும்புவதுடன் அவர்களின் வாழ்க்கை காலகட்டங்கள் முழுதும் அவர்கள் தங்கள் விடுமுறைகளை எதிர்பார்த்தே கிடக்கின்றனர்,அவர்களின் அதிக சம்பாத்தியம் அதற்கு என்றே செலவாகின்றது.கீழைதேய மக்கள் இயற்கையுடன் ஓரளவு இணைந்த வாழ்க்கை முறையை கொண்டிருப்பதால் அவர்களுக்கு விடுமுறைகளில் சுற்றுலா செல்ல வேண்டிய தேவைகள் இருப்பதில்லை,,தவிர நவீன உலக ஒழுங்கின்படி மேல்நாட்டு இசை மூலம் அதிகமான அரசியல் மத கருத்து திணிப்புக்கள் தொடர்ந்து நடைபெறுவதுடன்,அதற்காக பெருந்தொகை பணம் கலைஞர்களுக்கு நாட்டு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. நவீன இசை தனது இலத்திரனியல் இயல்பினால் மக்களின் மூளையை செயல்படாம கட்டி போடுவதுடன்,வெளியுலகம் பற்றி திரையினை போட்டு மனிதர்களை குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள் வைத்து கொண்டுள்ளது,மனிதனின் இயற்கை தேவையை செயற்கைகாக தமது தேவைக்கு பயன்படுத்தி மனிதர்கள் மீது கருத்துக்களை திணித்து உலக இயக்கத்தை கட்டுபடுத்துகின்றனர்..
மாற்றாக இசை மூலம் மக்களை சென்றடையும் உலகம்,அரசியல் பற்றிய விழிப்பான கருத்துக்கள்,அதை பரப்பும் கலைஞர்கள் தொடர்ச்சியாக கொல்லப்படுகின்றனர்,டுபாகா தொடக்கம் மைக்கல் ஜக்சன் வரை இதில் அடக்கம்,இவர்களின் பாடல்களில் மக்களை விழுப்பூட்டும் கருத்துக்கள்,அதிகாரத்தை கேள்வி கேக்கும் படியாக இருக்கும்,இவை உலக அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றது.இசையின் தாக்கம் பற்றி சாதரண மக்களை விட அதிகமாக இவர்களுக்கு தெரிந்து இருப்பதால் இவர்கள் சரியான கருத்துக்கள் மக்களை இசை வழியில் போய் சேர்வதை விரும்புவதில்லை,இயற்கையின் உலக பிரபஞ்ச மொழி இசை இன்று அதற்கு எதிராக பயன்படுத்தப்பட்டு கொண்டுள்ளது.இதன் மூலம் மனிதம் வரட்சிக்கு உட்படுத்தப்பட்டு எங்கும் கூச்சல் குழப்பங்களே மிஞ்சுகின்றன.மக்கள் இயற்கைக்கு திரும்புவதன் மூலமும் இதயத்திற்கு ஒவ்வாத இசைகளை தவிர்ப்பதன் மூலமுமே நலம் பெற முடியும்…
- பிரித்தானியாவில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு நாள்
- மே18 முள்ளிவாய்கால் தமிழினப்படுகொலை நினைவு நாள் பிரித்தானியா
- மே18 முள்ளிவாய்கால் தமிழினப்படுகொலை நிகழ்வுகள் பிரித்தானியா
- அன்றே கூறினாா் எம் ஈழத்தின் கவிஞா்
- லன்டனில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 34ம் ஆண்டு நினைவு நிகழ்வு