முதல் முறையாக இரு நுரையீரல்களும் மாற்றப்பட்ட நோயாளி…

76

கொரோனா தொற்றிய நோயாளிக்கு இரு நுரையீரல்களையும் மாற்றி காப்பாற்றிய வைத்தியர்கள்!

கொரோனா தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு, முதல் முறையாக இரு நுரையீரல்களும் மாற்றப்பட்ட நோயாளி, முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

போலந்தின் தெற்குப் பகுதியிலுள்ள டைஷி நகர மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த கிரெகோர்ஸ் லிபின்ஸ்கிக்கு (45), இரு நுரையீரல்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.

அவற்றை நீக்கிவிட்டு, மாற்று நுரையீரல்களைப் பொருத்தினால் மட்டுமே அவரைக் காப்பாற்ற முடியும் நிலை ஏற்பட்டது.

அதையடுத்து, அவருக்கு உறுப்பு தானம் செய்த ஒருவரிடமிருந்து பெறப்பட்ட இரு நுரையீரல்கள் பொருத்தப்பட்டன.

கொரோனா நோய்க்கு நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது அதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில் தற்போது உடல் நலம் தேறியுள்ள அவர், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.