திருகோணமலை மூதூர் இத்திக்குளம் கிராமத்தில் முதலை பிடியிலிருந்து சிறுவனை மீட்க முடியாமல் பொதுமக்கள் திண்டாட்டம் இன்னும் தொடர்கின்றது !!!
திடீர் உயிராபத்துக்களுக்கான மீட்புப் பணிச் செயற்பாடு நடைமுறையில் உள்ளதா ……?
மூதூர் பிரதேச செயலகம் – பள்ளிக்குடியிருப்பு ; இத்திக்குளத்தில் இன்று (27/03) மாலை குளித்துக் கொண்டிருக்கும்போது 15 வயது தமிழ் #சிறுவனைமுதலைஇழுத்துச்சென்றுள்ளது.
தற்போது வரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. பொலிசார் மற்றும் கடற்படையினருக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்படையினர் மீட்புக்குழுவினை அனுப்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
நேரம் கடந்து போகிறதே என்று கவலை ஒரு பக்கம் சிறுவன் கிடைப்பானா என்ற நம்பிக்கையீனம் ஒரு பக்கம் இறந்த உடலம் சரி கிடைக்காதா என்ற சிந்தனைகள் ஏதோ எல்லாம் செய்கிறது ,
எதிர்பாராத ஆபத்துக்கள் மற்றும் விபத்துக்களின் போது உயிருக்குப் போராடுவோரை துரிதகதியில் மீட்பதற்கான பொறிமுறை மூதூர் கிழக்கில் இல்லாமையின் காரணமாக அநாவசிய உயிரிழப்புக்கள் பதிவாகின்றன.உயிராபத்துக்கள் ஏற்படும் போது போலீசாரை அழைப்பதனால் அவர்களால் மனித வலுவைத் தவிர வேறு எதனையும் செய்யும் வசதிகள் அவர்களிடமும் காணப்படுவதில்லை.
