மைத்திரிக்கு புனர்வாழ்வு – பொன்சேகா கோரிக்கை

386

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பொய்களை கூறிய சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனாவை புனர்வாழ்வுக்கு அனுப்பவேண்டும் என்று முன்னாள் இராணுவ தளபதி கோரியுள்ளார்.

நாடாளுமன்ற குழுவில் ஆஜராக மைத்திரி,கடந்த ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சாட்சியமளித்த போது விடயங்களை மாற்றி மாற்றி முன்னுக்கு பின்னாக கூறியுள்ளார்.இதனால் குழப்பமடைந்த விசாரணை குழு மீண்டும் நேற்று அவர் வீட்டுக்கு சென்று வாக்குமூலங்களை எடுத்துள்ளது.இது தொடர்பான கருத்து தெரிவித்த பொன்சேகா,நாட்டின் உயர் பதவியில் இருந்தவரே,நாட்டின் பாதுகாப்பு பற்றிய மிகபெரிய சவால்களுக்கான விசாரணைகளில் பொய்களை கூறியுள்ளமை மிகபெரிய தேசதுரோகம்,ஆகவே அவரை புனர்வாழ்வுக்கு உட்படுத்துங்கள் என்று கோரிக்கைவிடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதாக மைத்திரிபால சிறிசேனாவுக்கு சர்வதேச விருது கிடைத்தமையும் குறிப்பிடதக்கது.