நாளை நள்ளிரவு முதல் பொதுமுடக்கம் பிரான்சில்.

125

கொரோனா வைரசின் இரண்டாம் அலையினை கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் நாளை நள்ளிரவு ( வெள்ளிக்கிழமை) முதல் டிசெம்பர் 1ம் தேதி வரையிலான பொதுமுடக்கத்தினை நாட்டு மக்களுக்கு அறிவித்த அதிபர் ஏமானுவல் மக்ரோன், 4 இலட்சம் உயிர்களை பலிகொடுத்த தனது அரசு தயாரில்லை என தெரிவித்துள்ளார்.

முன்னைய பொதுமுடக்கத்தை போல் அல்லாது, சற்று தளர்வுடன் கூடிய வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இப்பொதுமுடக்கத்தின் போது குழந்தைகள் காப்பகங்கள், பாடசாலைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்காடிகள், உடையகங்கள் உட்பட அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் திறந்திருப்பதற்கு அனுமதிக்கப்படுவதோடு, முதன் 15 நாட்களின் நிலைமைகளுக்கு அமைய இவைகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குடும்பங்களின் தனிப்பட்ட ஒன்றுகூடல்களுக்கும் தடை விதிக்கப்படுகின்றது. அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்லவதற்கு அனுமதிப்பத்திரம் கட்டாயமாகப்படுகின்றது. அனுமதிக்கப்பட்ட வேலைத்தளங்களுக்கு செல்வோர் வேலைதள நிறுவனத்தின் அத்தாட்சிபத்திரம் அவசியமாகின்றது.
இதேவேளை வயது வேறுபாடின்றி வைரஸ் தொற்றி வருவதாக தெரிவித்த அதிபர், தீவிரசிகிச்சை பிரிவில் உள்ளவர்களில் 35 வீதத்துக்கும் குறைவானவர்கள் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.