புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 26 எனவும் 40 அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.

மொஹமட் அலி சப்றி, ஜீ.எல்.பீரிஸ், உதய கம்மன்பில, நாமல் ராஜபக்ச ஆகியோரும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை பிரதமர் மகிந்த ராஜக்ச நாளைய தினம் புதிய பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ளார்.

மகிந்த ராஜபக்ச களனி விகாரையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளார்.

இதனையடுத்து கண்டி தலதா மாளிகையில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இரண்டாவது அமைச்சரவை இதுவாகும்.