நான் பாா்த்து வியந்தஅதிசயப்பெண்மணி

43

அம்பிகை அம்மா
இந்தப் பெயருக்குள்
எத்தனை கம்பீரம்?
மன உறுதி, அன்பு, அக்கறை
அவருடனான சிறு
உரையாடலில்
கற்றறிந்தேன்.
அவரின் தமிழ்பற்றும்
மக்கள் மீதான
கருணையான உள்ளத்தையும்…!
“அம்மா” என்று சென்றால்
அனைத்தையும் வாரிவழங்கும்
நல்லுள்ளம்…!

“தாயே..!” என
நம்மை கதறவைத்துவிட்டு
உண்ணாமல் உறங்காமல்
அவா்படும் வேதனையை
வாா்த்தைகளால் கூறமுடியவில்லை!
என் கண்களுக்கு
வானத்துத் தேவதையாக
காட்சியாளித்தாா்..!

இன்றைய இரவில்
படுத்துறங்கும் சிறுபொழுதில்
ஒவ்வொரு நிமிடத்தையும்
இரசித்தேன்…!

இராப்பொழுதின் மின் மினிகள்
அவா் ஔிமுகத்தில்
பல மின் மினிகளைக் கண்டேன்…!!
அவருடன் இருந்த ஒவ்வொரு மணித்துளிகளையும்
எனக்கு அம்மாவின்
ஆசிகள் நிறையவே பெற்றதாக உணரவைத்தது…!!

12ம் நாளின் இராப்பொழுதுகளும்,
13ம் நாளின் விடியலும்…!
அம்மாவிடம் இருந்து
விடைபெற்று
என் வீட்டிற்கு வந்ததும்
கனவா நிஜமா என
என்னையே கேள்வி கேட்டேன்…!

தயவு செய்து என் “தமிழினமே
இன்றே ஒன்றுபடு ஒற்றுமையாக”
“அம்பிகையை” நாம் கோயில்களில் தேடுகின்றோம் நம் கண்முன் எம்முடன் உலாவருகிறாா் “தாட்சதேவி”
இது புதுயுகம் படைக்கும் காலம்…! இளம்தலைமுறைக்கு விடுக்கப்படும்
ஒரு சாவலும்….!

sajee.k