நடைமுறைக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகள், மதுச்சாலைகள் அனைத்தும் இரவு 10 மணிக்கு மூடப்படும்..

52

Île-de-Franceக்குள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை அடுத்து, சில புதிய அளவீடுகளை சுகாதார அமைச்சர் (23/09/2020) வெளியிட்டார்.

சுகாதார அமைச்சர் Olivier Véran தெரிவிக்கும் போது Île-de-France மாகாணம் உட்பட Lille, Toulouse, Saint-Étienne, Rouen, Grenoble மற்றும் Montpellier ஆகிய நகரங்களுக்கும் இந்த புதிய அளவீடுகள் அல்லது கட்டுப்பாடுகள் பொருந்தும் என தெரிவித்தார்.

• 5,000 பேர் வரை அனுமதிக்கப்பட்ட பாரிய நிகழ்வுகள், உதைபந்தாட்ட போட்டிகள், மைதான நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு, அதிகபட்சமாக 1,000 பேர் வரை மாத்திரமே இனிமேல் அனுமதிக்கப்படும்.

• மதுச்சாலைகள் அல்லது இரவு நேர மதுச்சாலைகள் அனைத்தும் இரவு 10 மணிக்கு மூடப்படும்.

• சிறிய அளவு கொண்டாட்டங்கள், விருந்துபசாரங்கள், பிறந்தநாள் விழாக்கள் மற்றும் திருமண வைபோகங்களின் போது 30 பேர் மாத்திரமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்கள்.

• பூங்காக்கள், வீதிகள் மற்றும் பொது இடங்களில் 10 பேர் வரை மாத்திரமே ஒன்று கூடலாம்.

• விளையாட்டு அரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் அனைத்து விருந்து விழா கூடங்கள் அனைத்தும் மூடப்படுகின்றன, போன்ற புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக Olivier Véran அறிவித்தார்.