நடிகர் சூர்யா நடித்த Soorarai Pottru (சூரரைப் போற்று) படம் தற்போது வெளிவந்து பேசப்பட்டுக்கொண்டு இருக்கும் இன் நேரம்.
ஒரு சமூகத்தில் தன் இனத்தில் ஒருவன் – அடையாளப் படுத்தப்படுகின்றான் வெற்றி பெறுகின்றான் சாதனை படைக்கின்றான் என்றால் அவன் சார்ந்த இனம் அவனை வரவேற்று வாழ்த்தவேண்டும்..

கனடாவில் வசித்துவரும் நம் ஈழத் தமிழர் ஒருவர் தனது கடின உழைப்பாலும் ஆற்றலாலும் அவர் திறமையாலும் வெற்றி பெற்று நிற்கின்றார் புலம்பேர் மண்ணில் பலதரப்பட்ட தொழிலதிபர்கள் இருக்கின்றார்கள் அவர்களில் குறிப்பிட்ட நபர்களே நம் தேச மக்களுக்காக குரல் கொடுத்தும் உதவிகரம் நீட்டியும் வருகின்றவர்கள் அவர்களில் ஒருவர். கனடாவில் வாழ்ந்து வரும் சந்திரன் ராசலிங்கம் என்பவர். யாழ்ப்பாண இந்து கல்லூரியின் பழைய மாணவர், இலங்கையை விட்டு $40 உடன் கனடாவிற்கு
வந்து இறங்கி இன்று 28 வருடங்கள். Inforce Group of Companies என்னும் நிறுவனம் உருவாக்கி 8 வருடங்கள். அதன் ஊடாக மாபெரும் வெற்றி பெற்று நிற்கின்றார்.
இன்று தனக்கு சொந்தமாக ஒரு விமானத்தை வாங்கி தன் வளர்ச்சியில் சாதனை புரிந்து நிற்கும் நம் தமிழர் சந்திரன் ராசலிங்கம் அவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ளுங்கள். நன்றி 🥰 🥰 🥰 🙏
-manmathan basky-