நேற்றோடு கூக்குரலிட்டு, முடிந்துபோனதல்ல அந்த கனவு.
ஒவ்வொரு தமிழனின் நெஞ்சுக்குள்ளும் அணையாமல் தொடர்ந்து பாதுகாக்கப்படவேண்டிய அக்னி குஞ்சு.
எந்த ஒரு பெருவெற்றியும் ஒரே நாளில் கிடைத்துவிடாது. திட்டமிடப்பட்ட, தொடர்ந்த, உறுதியான முயற்சிகளால் மட்டுமே அது சாத்தியப்படும்.
இப்போதைய உடனடி தேவை உலகளாவிய தமிழர்களை பொதுவான ஒரு புள்ளியில் ஒன்றிணைக்கும் ஒரு விரிவான திட்டமிடல்தான்.
இரண்டாம் கட்டமாக யார்யாரை இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தவேண்டும் என்கிற சரியான ஒருங்கிணைப்பு வேண்டும். இந்த நிலை மிக மகக் கடினமானது. புல்லுருவிகளும், துரோகிகளும் உள்நுழையாமல் எந்த ஒரு சமரசத்திற்கும் இடங்கொடுக்காமல் உறுதியான சரியான நபர்களை தேர்ந்தெடுத்து ஒன்றிணைக்க வேண்டும். இந்த நிலையை சரியாக கடந்துவிட்டாலே பாதி வெற்றியை அடைந்த மாதிரிதான்.
மூன்றாவதாக, பேசிக்கொண்டே இருக்காமல் திட்டமிடப்பட்ட செயல்களை உடனே செய்யத் துவங்கிவிடவேண்டும். திறமை, வேகம், விவேகம்,கடின உழைப்பு முதலியவற்றை மூலதனமாக தொடர்ந்து பயன்படுத்தவேண்டும். இடையில் தோல்விகள், தொய்வுகள் வரலாம். அதையெல்லாம் படிக்கட்டுகளாக்கி உலக இயங்கியலை இயக்கும் சக்தியாக நாம் உருமாறவேண்டும். தொடர்ச்சியான வலிமையான செயல்கள் மட்டுமே நம்மை இலக்கை நோக்கி அழைத்துச்செல்லும்.
நான்காவதாக நம்முடைய செயல்களை தொடர்ச்சியாக ஆய்வு மற்றும் மீளாய்வு செய்து தவறுகள் நிகழாவண்ணம் கட்டுப்படுத்தவேண்டும். இதனால் நம் இயங்கியலின் நோக்கம் தடைகள் இல்லாமல் தொடரும்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து,அதனை அவன்கண் விடல்.
தமிழர்களின் தாகம், தமிழீழத் தாயகம்.
-தமிழர் சமூக சங்கம்.