நன்பனின் ஆறுதல் கரம்

79

என் நம்பிக்கையின் ஔிவடிவம்
எனக்கு கிடைத்த வரம் -நீ
அன்பு மழையில்..!
அழகிய நினைவுகளை செதுக்கும்
அன்பான உறவு நீ
என்னுள் ஆயிரம் துன்பங்கள்
நிலைத்திருக்க…!
அத்தனையையும் ஒரு
நொடியில் சிறதடிக்கும்
விந்தைக்காரன்….!
ஆணவத்தை ஒதுக்கி வைத்து
அன்பை மட்டுமே அனைவரிடத்திலும் பொழியும்
பாசக்காரன் என் நன்பன்
சுயநல உலகில்….!!
பொதுநலம் கருதி வாழ்பவன்
தன்னலம் பாராது
என் நலம் தன்னை
பலமுறை காத்த
உத்தம வீரன்டா
கா்ணனாக எனக்கு கிடைத்த கொடைவள்ளல்
ஆருயிா் தோழன் – நீ
இவ்வுலகம் உள்ள காலம்
வரை உன்னை நான் மறவேன்..!
வாழ்த்துவேன் என் உயிா் பிரியும்
இறுதி நொடிவரை…!
Sajee.k