தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்தத்துள் நெறி தவறிய முறையில் பல்லாயிரம் மக்களை அழித்துத் தமிழர்களை வெற்றிகொண்ட சிங்கள இனவாத அரசாங்கம் தற்போது, 11 வது தடவையாகவும் சிங்கள வீரர்களாக இராணுவத்தை வர்ணித்துக் கொண்டாடுகிறது.
தமிழர் தேசம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்ய, சிங்கள தேசம் போர் வெற்றி நாளாக மறுபுறத்தில் கொண்டாடுகிறது. ஆக,இலங்கையில் இரு தேசங்களுண்டு; தமிழர் தேசத்தை வீழ்த்தியதுள் வெற்றி வாகை வருடாவருடம் சூடி , எமக்கு எதிரான வரலாற்றை நீங்கள் ,உறுதி செய்கிறார்கள்,சிங்கள மக்களும் அவர்களின் இனவாத அரசும்.
1971‘ இல் JVP‘யின் ஆட்சிக் கவிழ்ப்பின் போராட்டத்தைத் தோற்கடித்த இராணுவ வெற்றியை, சிங்கள அரசு கொண்டாடுவதில்லை, என்பது சிங்களவினத் தேசியக் கூட்டுணர்வின் வலுவுள்ளது!
சிங்களம் தமக்குள் கட்சிகளாய், அமைப்புகளாய் பிரிந்து நின்றாலும் அதற்கென்றிருக்கும் பொதுப்புத்தியுள் என்றுமே பிரிவினையைக் காட்டியதில்லை. ஒன்றாகவே நிற்கிறது. தமிழர்கள் அப்படியல்ல, தமிழர்களுக்கு பொதுப்புத்தியொன்றொன்றில்லவேயில்லை. 71,88 ஜே.வி.பி புரட்சிகளை வென்ற சிறிலங்கா அரசு அவற்றையோர் வெற்றியாக கொள்ளாது அல்லது பிரமாண்டப்படுத்திக் கொண்டாடாமல், மே 18 ஐ ஒன்றாக நின்று பிரமாண்டமானளவில் கொண்டாடுகையில், எமக்குள் நாமோ ஒரு பகுதியினர் துக்கமாக்கொள்ளவும் இன்னோர் பகுதியினர் புலியழிக்கப்பட்டதாய் அகமகிழ்ந்து கொண்டாடிக் கொண்டுமிருக்கின்றனர். முள்ளிவாய்க்கால் அழிவென்பது ஒட்டுமொத்தமான ஈழத்தமிழித்தினதும் மீது மேற்கொள்ளப்பட்ட பேரழிவு என்பதனை வித்தியாசமாக சிந்திக்கும் தமிழர்கள் உணர்வதில்லை.தமிழர்களினுள் இயல்பாகவே உள்ள பிரிவினை மனப்பான்மை இவற்றுக்கு உரம் சேர்ப்பதால்,இயல்பாக ஒற்றுமையாக உள்ள சிங்கள இனத்தால்,தமிழினத்தை இலகுவாக பிரித்தாள கூடியதாக உள்ளது.அவர்கள் இலகுவாக வென்றுவிடுகிறார்கள்.சிங்களவர்கள் இயல்பாக ஒற்றுமையாக இருக்க தெரிந்ததால்,ஒரு நாட்டினுள் அழகாக வாழ கின்றனர்,ஒரு நாட்டினுள் ஒற்றுமையாக வாழ தெரியாத தமிழர்கள் ஒவ்வொரு நாடாக,அலைந்து உலகம் முழுதும் பரவி வாழ்கின்றனர்.பரவி வாழும் ஒற்றுமையில்லாத இயல்பை வைத்துள்ள தமிழர்களை ஒரு தனி நாட்டு கோரிக்கைக்குள் அடக்க முற்படுதல்,அவ்வளவு எளிதல்ல,பலத்தை பொறுத்து குறிப்பிட்ட காலம் தாக்குபிடிக்கும்,பின்னர் அப்படியே விட்டுவிடவேண்டிய ஒரு நிலைதான்.சிங்களவர்கள் சிறிலங்காவுக்கு அகதிகளாக வந்த ஒரு இனம்தான்,வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களிலும் தென்னிந்திய அச்சுறுத்தல்களும் அமைய அவர்கள் இருப்பதை வைத்து கொண்டு தங்களை ஒரு இனமாக கட்டமைத்து கொண்டதால்,வந்த இடத்தில் அவர்களுக்கு ஒரு நாடு கிடைத்தது.சொந்தமாக எதுவும் திட்டமில்லை என்றால் கூட பரவாயில்லை,சிங்களவர்களை முன்மாதிரியாக கொண்டாவது எதாச்சு முயற்சி செய்து பார்க்கலாமே..