இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை – New Education Policy in India

348

National Education Policy ( NEP)

System சரியில்ல system ah மாத்தனும்னு சொன்னவங்களாம் இப்போ Nep க்கு opposite ah பேசிட்டு வராங்க. ரொம்ப நாளைக்கு அப்றம் ஒரு பெரிய மாற்றம் வந்திருக்கு. அத பத்தி நல்லா ஆராய்ந்துட்டு, தெளிவா ஒரு பதிவு போடனுமேனு தான் இதை பற்றி நான் எங்கயும் பேசவில்லை.

இப்போ பேச வேண்டிய கட்டாயம்.

Ok. Let’s get into this,

1. இதுவரைக்கும் நாம படிச்சது 10+2 stage. இப்ப NEP ல கொண்டு வந்திருக்கிறது, 5+3+3+4 system.

அதாவது 10வது 12 ஆவது க்கு மட்டுமே Public தேர்வு நடத்தப்பட்டது போய் இப்போ, இந்த ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் பப்ளிக் தேர்வு நடத்தப்படும்.

இதனால மனப்பாடம் பன்னும் போக்கு பெருமளவு குறையும். நமக்கு தெரியாத விடயமொன்றும் இல்ல. 10 வது பொது தேர்வுக்காக 9 வதுலயே 10 ஆம் வகுப்பு எடுக்கபோவதாக பல பள்ளிகள் இலட்சம் இலட்சமாக விழுங்கும். இதுல ஏங்க.. அரசு பள்ளிகள்லயே special class னு சொல்லி நைட்டு 7 மணிவரைக்கும் class எடுப்பாங்க. இதுல அது பத்தாதுனு tution வேற தனியா போவாங்க.

என்னைக்கு tution போகாம பள்ளியிலே ஒருவனுக்கு தேவையான கல்வி கிடைக்கிதோ அப்ப தான் இந்த system மாறும் னு நான் நிறைய time நினைச்சிருக்கேன்.

சரி.. இப்போ இத்தன பொது தேர்வு வச்சா மட்டும் மனப்பாடம் பன்ன மாட்டாங்களா?

3 ஆம் வகுப்பிலேயே ஒரு குழந்தைக்கு பொது தேர்வை குறித்த பயம் உண்டாக்கனுமா?

கண்டிப்பாக இந்த கேள்வி ஒரு நியாயமான கேள்வி தான். அதுக்கு பதிலும் National education policy ல இருக்கு.

அதுக்கு அவங்க கொடுக்குற பதில் தான் self assessment. அதாவது சுய மதிப்பீடு. இதுவரைக்கும் teacher மட்டும் தான் நம்ம பேப்பர திருத்துவாங்க. இனிமே மாணவர்களும் திருத்தலாம்.

நினைச்சு பாருங்க. உங்க பேப்பர நீங்களே திருத்த போறீங்க. அப்போ எதுக்கு மனப்பாடம் பன்னனும். ஏன் பயம் வர போகுது..

இது மட்டுமில்லாம பொது தேர்வு வெறும் ஒரே ஒரு முறை (அதாவது மார்ச் / ஏப்ரல் மாதம்) மட்டும் நடக்காது. அரையாண்டு தேர்வு+ இறுதி தேர்வு இரண்டையும் இணைத்து தான் பொது தேர்வு நடைபெறும்படியான system வைத்துள்ளார்கள்.

2. Vocational training..

நமக்குலாம் ஸ்கூல் படிக்கும்போது வர பெரிய தலைவலி பள்ளி பை தான். கிட்டத்தட்ட 2 கிலோவ சுமந்துட்டு மூட்டைய தூக்கிட்டு போவோம். இதனாலயே நிறைய டைம் எனக்குலாம் உடம்பு சரியில்லாம போயிடும்.

நாம அப்படி இருக்கும்போது இனிமே நீ ஸ்கூல் க்கு ஒரு பையே எடுத்துட்டு வர வேணாம்னு சொன்னா எப்படி இருக்கும்?

அதற்கு தான் Bagless days னு ஒரு 10 நாள அரசு ஒதுக்கிருக்கு. இந்த 10 நாள் நாம tour போற மாறி ஒரு புது வேலைய கத்துக்க போறோம்.

இது குலகல்வி திட்டத்த ஆதரிக்குது னு நிறைய பேரு பேசுறத கேட்டேன்..

அதாவது அந்த காலத்தில குலகல்வி னா, காலையில ஸ்கூல் போயிட்டு, மதியம் அவங்க அவங்க வீட்டுக்கு போயிட்டு அப்பா அம்மா பாக்குற வேலைய கத்துக்கனும்.

இதனால மதியம் ஸ்கூல் முடிஞ்சோனே தச்சு வேல பாக்குறவங்களோட பையன் தச்சு வேல தான் பாப்பான். சித்தாலோட பையன் சித்தால் வேல தான் பாப்பான், பறை அடிக்கிறவங்க பையன் பறை தான் அடிப்பான், அயிறு பையன் வேதம் படிப்பான்.

இப்போ இந்த குலகல்வி திட்டத்துக்கும், vocational training க்கும் என்ன சம்பந்தம்?

நீ அயிறு பையனா, மேஸ்திரி பையனா னு பாகுபாடு காட்டாம, யாரா இருந்தாலும் vocational training விவசாயம் போட்டா விவசாயம் கத்துக்கலாம், electrician training கொடுத்தா எல்லாரும் அத கத்துகிட்டு தான் ஆகனும். இதுக்கும் குல கல்விக்கும் எந்த இடத்தில ஒத்துபோகுது.

சரி, இதனால drop out level அதிகமாகும். நிறைய பேரு அந்த வேலைய கத்துகிட்டு degree வாங்குறதுக்கு முன்னாடியே drop out ஆகிட்டு அந்தந்த வேலைய பாக்க போயிட மாட்டாங்களா?

போவாங்க. அப்ப கூட அவங்களுக்கு எந்த தொழில் பிடிக்குமோ அந்த தொழிலுக்கு தான் போவாங்க. பிடிக்காத வேலைக்கு போ மாட்டாங்க. அப்படியே இருந்தாலும் 2 % பேரு தான் போவாங்களே ஒழிய மத்த பேருலா அப்படியே தான் படிப்பாங்க.

பிடிச்ச வேலைய செய்றது தான் சார் ஒரு உண்மையான கல்வியின் நோக்கமே..

3.Self assessment

இது நான் முன்னாடியே சொல்லியிருந்தது தான் நம்ம பேப்பர நாமலே திருத்துவது.

பொதுவா ஸ்கூல பொருத்த வரைக்கும் நாம எப்படி இருக்கோம், எந்த direction ல போகனும்னு நிறைய teachers வழி காட்டுவாங்க. ஆனா college வந்தோனே அது குறஞ்சிடும். College முடிச்சோனே அதுவும் இல்ல நம்மல நாமலே தான் self evaluate செஞ்சிகனும்.

இந்த training ah பள்ளி பருவத்திலேயே நமக்கு வழங்குவது தான் self assessment. இதனால நம்மலோட strength weakness எல்லாம் நமக்கே தெரிஞ்சிடும். நம்ம என்ன படிக்கனும் வேற ஒருத்தவங்ககிட்ட கேக்குறத விட நாமலே முடிவு செய்யனும். அதுக்கு தான் இந்த self assessment.

இது எல்லாத்தையும் விட ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் hereafter the government will spend it’s 6% gdp for education.

இதுக்கு முன்னாடி வெறும் 3℅ தான் வழங்கிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போ அதை விட இரண்டு மடங்கு இது அதிகம்.

4. Multiple entry exit programme

இப்போ ஒரு BE degree நாலு வருசம் which means 4 வருசம் படிச்சா தான் நமக்கு degree கிடைக்கும்.

ஆனா இந்த programme படி ஒவ்வொரு வருசத்துக்கும் ஒரு certificate உண்டு. உதாரணத்துக்கு, BE முதல் வருசம் முடிச்சோனே ஒராண்டிற்குரிய certificate வழங்கப்படும். அத வச்சு வேற college join பன்னிட்டு கூட again 3 வருசம் கழித்து வந்து நாம BE 2 nd year continue பன்னிக்கலாம்.

இதுல pros and cons இரண்டுமே உள்ளதாக தான் நான் பார்க்கிறேன்.

100 foreign Institute ஓட campus களை இந்தியாவில் திறக்க இப்போது அனுமதி அளித்துள்ளது அரசு.

அந்த காலத்தில அம்பேத்கர், காந்தி, இராமானுஜம் லாம் கடல் கடந்து கப்பல்ல போய் பெரிய காலேஜ் ல படிச்சாங்கலாம். இப்போவும் நிறைய பேரு பெரிய காலேஜ் க்கு கடல் கடந்து போய்கிட்டு தான் இருக்காங்க. ஆனா என்ன விமானத்துல போறாங்க. அந்த விடயமும் இதனால நிறையவே குறையும்.

(இதுல ஒரு பக்கத்த தானே காட்டுனிங்க, மறுபக்கத்தையும் காட்டிருந்தா தெரிஞ்சிருக்கும்ல )

1.மும்மொழி கொள்கை ::

இது தான் இங்க இருக்க பிரச்சனை. ஒரு சிறுவன் கல்வியறிவு பெருவது தான் இங்க sole objective. அதுக்கு அவனோட தாய்மொழி வேண்டும். அந்த கல்வியறிவை கத்துகிட்டு அவன் உலகம் சென்று தொழில் புரியவோ, சாதனை படைக்கவோ அவனுக்கு ஒரு பொதுமொழி தேவை, அது தான் English. இதுல அவனுக்கு விருப்பம் இருந்தால் 3 வதாக ஒரு மொழியை படிச்சு கத்துக்க போறான். இதுல ஏன் மும்மொழி கொள்கை னு ஒன்னு கொண்டு வந்து அவனுக்கு திணிக்க வேணும்.

2. அடுத்த தாக Centralization. இந்திய அரசியலமைப்பு படி education comes under concurrent list. அதாவது மத்திய மாநில அரசின் கீழ் வருமொரு துறை. இதுல மாநில அரசை எதும் கேக்காமலேயே இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. சரி நல்லது யாரு பன்னா என்ன னு ஒரு விஷயம் இருந்தாலும், இந்த புதிய கல்விக் கொள்கைய சரிவர நடைமுறை படுத்துவது ஆசிரியர் ஒருவர் கையில் தான் இருக்கு.

அந்த ஆசிரியரை தேர்வு செய்யும் முழு அதிகாரம் அந்தந்த மாநில அரசிடம் தான் உள்ளது. இப்போ அது மத்திய அரசிற்கு மாற்றபடும் என்று தகவல் வருகின்றது.

இதை எந்த விதத்திலும் நியாயபடுத்த முடியாது.

3. இது முற்றிலும் என்னோட தனிப்பட்ட personal opinion தான். கைப்புள்ள சொல்ற மாதிரி தான் இப்பவும். நம்ம அரசுகிட்ட opening லா நல்லா தான் இருக்கும், ஆனா finishing சரி இருக்காது.

அதே போல தான் இத எந்த அளவுக்கு செயல்படுத்துறாங்கனு பொருத்திருந்து தான் பாக்க வேணும்.

ஒரு பால்ல ரெண்டு ஸ்பூன் சக்கரை போடனும்னா 2 spoon தான் போடனும். அவனுக்கு வேணும்னா அதிகமா போட்டுக்குவான்.

அதே போல தான் இந்த மும்மொழி கொள்கையும்.

ஆனா அந்த பால் அவனுக்கு அத்தியாவசியம். அத அவன் கீழ ஊத்துறதும், வாயில ஊத்துறதும் உங்க கையில தான் இருக்கு.

நன்றி🙏💕