வலியது வாழும் உலகில்…

194

முட்டைக்குள் இருக்கும் குஞ்சு வன்முறையை பாவித்து முட்டைக்கோதை உடைத்தே வெளிவருகிறது.

கோழிக்குஞ்சிடம் சென்று யாரும் வன்முறையை பாவிப்பது தவறு. நீ அகிம்சைவாதியாக இரு என்று போதிப்பதில்லை

அதுபோல் தாயின் கருப்பைக்குள் இருக்கும் குழந்தைகூட பிறக்கும்போது வன்முறையை பாவித்து வெளிவருகிறது.

அதுமட்டுமல்ல அந்த குழந்தை பிறந்தவுடன் வீறிட்டு அழுவதே இந்த உலகில் அது செய்யும் முதல் போராட்டம்.

அழுத பிள்ளையே பால் குடிக்கும். அதுபோல் போராடிய இனமே விடுதலை பெறும்.

ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

உலகில் நிகழ்ந்த அனைத்து விடுதலையும் வன்முறையிலேதான் நடந்துள்ளது.

அப்படியிருக்க தமிழ் இனம் மட்டும் அகிம்சை வழியில் விடுதலை பெற வேண்டும் என்று கூறுவது ஒன்றில் முட்டாள் தனமாக இருக்க வேண்டும்.

அல்லது அற்ப சலுகைகளுக்காக அடிமைத்தனத்தில் சுகம் காணும் பேர்வழகளின் உளறலாக இருக்க வேண்டும்.

ஒரு தேசிய இனத்தை அடக்கி ஒடுக்கும் எந்தவொரு தேசிய இனமும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது.

ஆனால், தமிழ் இனத்தை அடக்கி ஒடுக்கும் சிங்கள தேசிய இனத்துடன் 5 வயது முதல் வாழக் கிடைத்தது தனது பாக்கியம் என்று ஒரு தமிழ் தலைவர் கூறுவது அபத்தம்.

அதைவிட படு அபத்தமானது அவர் கூறியது சரி என்று நாலு பேர் நியாயப்படுத்த முயல்வது.

இது ஒன்றும் வியப்பு இல்லை. ஏனெனில் காலம் பூராவும் இப்படி கருங்காலிகளும் அதை நியாயப்படுத்தும் நாலு வெங்காயங்களும் இருக்கவே செய்கிறார்கள்.