நவீன் திசாநாயக்கவை, யூஎன்பியின் தோட்டத்தொழில் துறை தொழிற்சங்க தலைவராக ரணில் நியமித்துள்ளாராம்.
முன்னாள் பெருந்தோட்டதுறை அமைச்சராக இருந்து, தோட்ட கம்பனிகளின் ஏஜண்டாக செயற்பட்டு, தமிழ் தோட்டத்தொழிலாளர் சம்பள விவகாரத்தில், பெருந்தடையாக இருந்து துரோகம் செய்தவர் இந்த நவீன் என்பது நாடறிந்த விஷயம்.
இந்நிலையில், இந்நபர் எவருக்கு துரோகம் செய்தாரோ, அதே தோட்ட தொழிலாளர்களின் தொழிற்சங்க தலைவராக அவரையே வெட்கமில்லாமல், ரணில் நியமித்துள்ளார்.
இதன் மூலம் ரணில், தமிழ் மக்களை முட்டாளாக்க நினைக்கிறார். இது நடக்காது.
நடப்பது என்னவோ, தமிழ் மக்களிடம் தனக்கு எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் முற்றாக இழக்கிறார்.