கடலில் தத்தளித்த தமிழக மீனவரை கொலை செய்த இந்தியா – நெய்தல் படைக்க அமைக்க மீனவர்கள் ஆர்வம்

97

தமிழ் மீனவர் ரெஜின் பாஸ்கருக்கு கண்ணீர் வணக்கம்!

கடலில் 3 நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்த தமிழ் மீனவரைக் காக்க தமிழர் நாம் குரல் எழுப்பினோம்!ஆனால் இந்திய வல்லரசின் படைகள் வரவில்லை! அரசுகள் பாராமுகமாக இருந்தன!

ஈற்றில் கொள்ளுக்காடு தமிழக மீனவர்களின் பேருதவியால் அவரின் உயிரற்ற உடல் மட்டுமே கரை வந்தடைந்தது.

சடலக்கூறாய்வு முடிந்து விட்டது. உடல் அடையாளம் காட்டப்பட்டது என்றும் இன்று இரவுக்குள் அடக்கம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது!

ஆழ்ந்த இரங்கல்கள்!

இந்திய தமிழக அரசுகள் அவரது உயிரைக் காக்க எந்த முயற்சியும் எடுக்காததோடு ஒரு இரங்கலைக் கூட இதுவரையில் தெரிவிக்கவில்லை!

தமிழ் இராணுவ வீரரை தமிழக எல்லையில் நிறுத்துங்கள் என்ற போது இந்திய எல்லையில் தான் இராணுவம் இருக்க வேண்டும் என்றவர்கள் இந்திய கடல் எல்லையில் தமிழக மீனவர்களைக் காக்க இந்திய கடற்படை வராதது ஏன் என கேள்வி எழுப்பாதது ஏன்?

போனது தமிழன் உயிர் என்றால் தூசா?

ஈழத்தமிழரை அழித்தபோது இலங்கை அரசுக்கு துணை நின்ற இந்திய அரசு ..

தமிழக மீனவரை அழிக்கும் சிறிலங்காப் படைக்கு ஆயுதமும் பயிற்சிகளும் வழங்கும் இந்திய அரசு …

தமிழக மீனவனைக் காக்க முன்வராதது ஏன்?

நன்றி – Sivavathani

இது அப்பட்டமான ஒரு கொலை,கையாலகாத இந்திய அரசுக்கு பெருமுதலாளிகளுக்கு வேலை செய்வது மட்டுமே இலக்கு.தமிழ்நாட்டையும் பூர்வீக குடிகளான தமிழர்களையும் வஞ்சிப்பதை வாடிக்கையா கொண்ட மத்திய மாநில எடுபிடி அரசுகள்..நாம் தமிழரின் நெய்தல் படை என்ற இலக்கை நோக்கி மீனவர்கள் இன்று ஆர்வமாக பேசி வருகின்றனர்.நமக்கான காலத்தை நாம்தான் நமது செயல்கள் மூலம் உருவாக்க வேண்டும்.யாரும் எமக்காக போராடவோ காப்பற்றவோ வரபோவதில்லை.மீனவர்கள் நாமே நம்மை காப்போம்.எல்லையில் எதற்கும் உதவாத போலி இந்திய அரசுக்காக உயிர் விடும் தமிழர்கள் ஒரு கணம் சிந்தியுங்கள்.போலி மாயையில் எந்த பிரச்சினைகளும் தீர்க்கப்படாத வல்லரசுகளின் வர்த்தக நலன்களுக்காக நீங்கள் ஏன் சீனாவிடம் கல்லடி வாங்குகிறீர்கள்.நீங்கள் இங்கே இருந்தால் உங்கள் வீரம் எங்கள் ஊரை காப்பாற்றும்.

Editor – ஒரு பேப்பர்