இப்போ Sushanth singh மரணத்திற்கு பிறகு அதிகம் நம் காதில் விழும் விஷயம் Nepotism.
அந்த Nepotism இந்தியாவிலுள்ள அனைத்து துறையிலும் இருந்து வருகிறது என்று பரவலாக அறியப்பட்டது.
இப்போ அந்த நெப்போடிஸத்தின் தாக்கம் ஒரு நாட்டு பிரதமரை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு வந்துள்ளது.
அது தான் இலங்கை தேர்தல்.
கடந்த நவம்பர் மாதம் இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இலங்கை அரசியலைமைப்பின் சில சரத்துக்களை மாற்ற கோத்தபய ராஜபக்சே திட்டமிட்டாரு.
ஆனா அந்த திட்டம் பலிக்கல. இலங்கைய பொருத்த மட்டும் அரசியலமைப்பில மாற்றம் கொண்டு வரனும்னா, 2/3rd of the majority (அதாவது 3இல் 2 பங்கு Assembly members ஆதரவு தர வேண்டும்)
அது கோத்தபய க்கு எதிராவே இருந்தது.
இதை மாற்றி தன் விருப்பம் போல அரசியலமைப்பில மாற்றங்கள் கொண்டு வரனும்னா assembly லயும் நம்ம power இருக்கனும்னு கோத்தபய எண்ணினாரோ எண்ணமோ..
Snap election announce பன்னிட்டாரு. அதாவது election க்கென்று ஒரு தேதி நிர்ணயித்திருப்பாங்க. அதை மாற்றி முன் கூட்டியே election நடத்துவது பேரு தான் snap election.
அந்த election ல ததன்னுடைய அண்ணா மஹிந்தா ராஜபக்சே பெரிய அளவில ஜெயிக்க வேண்டுமென்று திட்டம் போட்டு காய் நகர்த்த ஆரமிச்சு, கடசியில ஒட்டுமொத்த இலங்கை அரசியலுக்கும் Checkmate வச்சாரு கோத்தபய.
அவரு நினைச்ச மாதிரியே மஹிந்தா ராஜபக்சே பெரிய அளவிலான வெற்றி பெற்று இப்போ இலங்கை பிரதமராக பதவி ஏற்றுகொண்டாரு..
பதிவி ஏற்றவுடன் தன் தம்பி கோத்தபய க்கு பாதுக்காப்பு துறையும், தன் மூத்த மகனான நமல் ராஜபக்சே க்கு விளையாட்டு துறையும், தன் அண்ணன் ஸமல் ராஜபக்சே க்கு உள்நாட்டு பாதுகாப்பு துறையும் ( internal security), அவருடைய மகன் சசீந்திரா ராஜபக்சே க்கு state affairs ministry உம் கொடுத்து இலங்கையை தன் குடும்பத்தாருக்கு பங்கு போட்டு பரிசளித்திருத்கிறார்..
இப்போது மொத்த இலங்கையும் ராஜபக்சே எனும் குடும்பத்தின் கீழ் இயங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதை தான் Nepotism த்தின் உச்சமாக நான் பார்க்கிறேன்.
இதுல காலம் காலமாக தனி பிரதிநிதித்துவம் கேட்டு வந்த இலங்கை தமிழர்களுக்கும், ராஜபக்சே குடும்பத்திற்கும் நீண்ட நெடிய காலமாக யுத்தம் நடந்து வந்துள்ளது. வெளிய பொறுத்தவரை இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரை தடுத்து நிறுத்தியவர் ராஜபக்சே என்று பெருமை பீத்திகொணடாலும், ஈழம் மற்றும் தமிழகத்தை பொருத்தமட்டில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த கொடுங்கோலனாக தான் இன்று வரை ராஜபக்சே விளங்கி வருகிறார்.
இப்போ மொத்த இலங்கையும் ராஜபக்சே குடும்பத்திற்கு சலாம் போடும் நிலை உருவாகியுள்ளது. இலங்கை தமிழர்களின் நிலையை பற்றி சொல்லி தான் தெரிய வேணுமா!
சினிமாவால் ஏகப்பட்ட நன்மையும் தீமையும் நடந்துள்ளது. ஆனால் இந்த நெப்போடிஸத்தை வெறும் சினிமாக்குள் அடக்குவது என்பது தவறு. சல்மான் கான் க்கு எதிரா குரல் கொடுத்தவங்க எல்லாரும், ராஜபக்சே க்கு எதிராக மூச்சு கூட விடல. இதிலிருந்து சல்மான் கானுக்கு எதிரா குரல் கொடுத்தவங்களுடைய கருத்தை ஒரு தனிமனித தாக்குதலாக தான் பார்க்க தோனுதே ஒழிய Nepotism க்கு எதிரான குரலாக பார்க்க தோனல.
இப்படியே இந்த விடயத்தை நாம் பொருட்படுத்தாமல் போகும் பட்சத்தில், நாளை மீண்டும் இலங்கையில் ஈழ படுகொலை நடக்கும், போர் நிகழும்.. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லபடுவாங்க..
அப்போ இந்தியாவிலும் ஸ்டேடஸ் பரக்கும்..
Say No to Nepotism னு..
நன்றி🙏