நினைவுகளுடன் நாம்…

117

எனக்காக ஒரு கவி
எழுதி
என் கண்
முன்னே
அழு அழுது
பாடிக் காட்டி விடு என்றும்,
யார் வந்து என்
வித்துடல் சுமப்பீர்கள்
என்னை நினைத்து
அழுவீர்களா
என்று
பகிடி பகிடியாய்
பகலிரவாய் -நீங்கள்
கேட்டு திரிந்த போதெல்லாம்
சிரித்துக் கொண்டே
இலகுவாய்‌ கடந்து போன
அந்த நாட்கள்
இப்போதெல்லாம்
ரணமாய் வலிக்கிறது… அக்கா

கூடியிருந்து கும்மாளம்
அடித்து
குறும்புகள் பல செய்து
கடமை என்றால்
கண்ணியமாய்
காய் நகர்த்தும்‌
வீரக் குழந்தையே
விடிவெள்ளியே ..

விடைபெறும் போது..
மலர் மாலை வேண்டாம்
கவி மாலை தொடுத்து
கல்லறையை நனைத்து
விடுகள் என்று சொல்லி
போனவள் தான்
மேஐர் நெல்ஷா

எழுதியே …முடியாத
உங்களின் நினைவுகளை
சுமக்கின்றோம் ..
வீரச்சாவு ‌19.01.2001

-மிதயா கானவி-