நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

84

2012ல் ஓடும் பேருந்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு,இன்று திகார் சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.குற்றவாளிகள் தரப்பில் சமர்பிக்கப்பட்ட கருணை மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து 4 குற்றவாளிகளுக்குமான தூக்கு தண்டனை உறுதியானது.இன்று காலை அவர்கள் திகார் சிறையில் சட்ட அதிகாரி,வைத்தியர் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டனர்.. இறுதி நேரத்தில் குற்றவாளிகளை பார்வையிட குடும்பத்தினரும் அனுமதிக்கப்படவில்லை.இது குறித்து கருத்து தெரிவித்த நிர்பயாவின் தாயார்.எனது மகளுக்கான நீதி கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.