தமிழ் உறவுகளுடன் கைகோர்த்த முஸ்லீம் உறவுகள்!

297

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு மீண்டும் முஸ்லிம் மக்களும் பூரண ஆதரவினை இணைந்து வழங்கியுள்ளார்கள்.

1990ம் ஆண்டின் பின்னராக முஸ்லீம் மக்களது இணைவு குறிப்பிட்டு தக்க செய்தியை வெளிப்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்கள் தமது வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் பூட்டி இன்றைய ஹர்த்தாலுக்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

இதேவேளை கதைவடைப்ப்பால் முல்லைத்தீவு மாவட்டமும் முடங்கியது.முஸ்லீம் வர்த்தகர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.எனினும் வர்த்தகர்களுக்கு கடைகளை திறக்குமாறு பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதனிடையே வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மீது அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் வவுனியா பசார் வீதிக்கு இன்றையதினம் காலை சென்ற வவுனியா பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர், மூடியிருந்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு தெரிவித்ததுடன் சில வர்தக நிலையங்களிற்குள்ளே சென்றும் கடைகளை திறக்குமாறு கட்டளையிட்டனர்.

இதனால் குறித்த பகுதியில் குழப்பமான நிலமை ஒன்று ஏற்பட்டிருந்தது.
எனினும் பொலிசார் கட்டளையிட்டபோதும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் கடைகளை திறக்காமல் கடையடைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர்.