வட மாகாண ஆளுநராக இராணுவ மேஜர் ஜெனரல் – கோட்டா வில்லங்கம்

281

வட மாகாணத்தில் ஆளுநராக முன்னாள் வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபாஸ் பெரேரா நியமிக்கப்படவுள்ளார்.இவ் நியமனமானது மிக விரைவில் இடம் பெற உள்ளது.

ராணுவ பின்னணியை கொண்டவர்களை அரச நிர்வாக கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டு வரும் நிலையில். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வியத்மக அமைப்பின் செயற்பாட்டாளராக இருந்த மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேராவை வடக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி நியமிக்கவுள்ளார்.

மத்திய அரசாங்கத்தின் அதிகார ஆளுமையை மாகாண சபைக்குள் குறைந்து விடாது முழு ஆதிக்கம் செலுத்தப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிகத் தீவிரமாக செயல்படுகின்றார்.

மாகாண சபையை வலுவிழக்கும் முயற்சிகளுடன்,கூடவே தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை முடக்கும் நோக்குடன்,ஒழுக்கம் என்ற பெயரில் முற்றுமுழுதான இராணுவ அதிகார ஆட்சியை சிறிலங்கா முழுதும் நிறுவி வருகின்றார்.இதுவரை உலகில் அரங்கேற்றப்பட்ட அனைத்து இராணுவ ஆட்சிகளும்,ஒழுக்கம் கட்டுபாடு என்ற பெயரிலயே மக்களை முட்டாளாக்கி,இறுதியில் அந்த முட்டாள் மக்களை இன்னொரு சக்தி பயன்படுத்தி,அவர்களால்,இவர்கள் கொடுங்கோலர்கள் என்று பெயரிடப்பட்டு அழிக்கப்படுவார்கள்.