வட மாகாணத்தில் வாக்களித்த அரசியல் தலைவர்கள்!

105

9வது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்களிப்புக்கள் இன்று விறுவிறுப்பாக இடம்பெற்று வருகிறது.

கொரோனா அச்சுறுத்தல் நிலவிய போதிலும், மக்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இன்று வேட்பாளர்களும், அரசியல் பிரமுகர்களும் வாக்களித்து வருகிறார்கள். வாக்களித்த பிரமுகர்களின் படங்கள் கீழே.

யாழ் மாவட்ட வேட்பாளர் த.சித்தார்த்தன் சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரியில் வாக்களித்தார்.

மன்னார் மாவட்ட வேட்பாளர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் வாக்களித்தார்.

யாழ் மாவட்ட வேட்பாளர் பா.கஜதீபன், இணுவில் மத்திய கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.

மன்னார் விடத்தல் தீவு ஜோசப்வாஸ் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் வாக்களித்தார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை சிதம்பர கல்லூரியில் வாக்களித்தார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கஜன் இராமநாதன் அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில் வாக்களித்தார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தம்பதியினர் மாவிட்டபுரம் அமெரிக்க மிசன் தமிழ்கலவன் பாடசாலையில் வாக்களித்தனர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் ஆகியோர் இன்று குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வாக்களித்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது வாக்கினை யா/புனித ஜேம்ஸ் மகளிர் பாடசாலையில் வாக்கினை பதிவு செய்தார்.

முன்னாள் அமைச்சர் டக்ள்ஸ் தேவானந்தா யாழ். நாவலர் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை அளித்துள்ளார்.

மேலும் பல அரசியல் பிரமுகர்களும் வாக்களித்துள்ளனர்.