NOTA விற்கும் உண்டு ஒரு வரலாறு

91


NOTA – None of the Above

என்னதான் Nota உலகம் பூரா பல காலமா இருந்துட்டு வந்தாலும், இந்தியாவில் 2013 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தான் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது..

India become the 14th country to introduce Nota option..

நாம நோட்டா பத்தி ஒரு குட்டி flashback போயிட்டு வந்திருவோம்..

1989 போலாந்து election:

Communist ஆட்சி நிகழ்ந்து வந்தது.

அந்த election ல vote பன்ன majority candidates வேட்பாளருக்கு vote போடாமல், அவர்கள் பெயர்களை அடித்து விட்டு அந்த சீட்டை பெல்லட்டில் போட்டு எதிர்ப்பை தெரிவித்தார்கள்…

இதை கருத்தில் கொண்டு மீண்டும் அங்கு தேர்தல் வைத்தார்கள்…அதிலும் இதே மாதிரி தான் நிகழ்ந்தது..

இறுதியில் இப்படி செய்தே போலாந்தில் கம்யூனிச ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்தார்கள்.

இப்படி தான் NOTA னு ஒருத்தன் முதன்முதலா பிறக்கறான்.

1992 ல ரசியா ல தேர்தல் ஒன்று நடக்குது.

அதில் மக்கள் Communist பார்ட்டியை விட Nota க்கு அதிகம் வாக்களித்து புதிய Russia வை பிறக்கவைத்தார்கள்.அப்போது ரசிய அதிபராய் இருந்த Boris Yelstein, Nota தான் ஒரு முழுமையான மக்களாட்சியின் அதிகாரம் என்று குறிப்பிட்டார்.

Indonesia வில் Makkan எனும் நகரின் மேயர் தேர்தலின் போது ஒரே ஒரு வேட்பாளர் Nota விடம் போட்டி போட நேர்ந்தது அவர் 47 % வாக்குகளை மட்டுமே பெற்றார். மீதமுள்ள 53% வாக்குககளை Nota பெற்றது..

அப்பல இருந்தே NOTA க்கு மவுசும் கூடி போய், நிறைய நாடுகள்ல தேர்தல்களில் நோட்டா வலம் வர ஆரமிச்சான்.

இந்த election ல நிக்கிற யாரையுமே எனக்கு பிடிக்கல எனும் பட்சத்தில் நாம Nota வுக்கு வாக்களிக்கலாம்..

ஒரு சில நாடுகளிலெலாம் Nota வெற்றி பெற்றால், அவ்விடத்தில் மீண்டும் ஒரு தேர்தல் வைக்கப்படும்.

அப்படி வைக்கப்படும் அந்த மறு தேர்தலிலும், முந்தைய election ல நின்ன எந்த வேட்பாளரும் நிக்க கூடாதென்ற நடைமுறையும் இருக்கு.

அப்படி நம்ம ஊர்ல வச்சா வேற லெவல்ல இருக்கும்…

ஒரு தடவை Maharashtra மற்றும் Haryana election ல இந்த Nota re election process வச்சாங்க.

NOTA க்கு வாக்களித்தால் நம் வோட்டு வீணாகிவிடும்னு நிறைய பேரு சொன்னாலும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தேர்தல்களில் Majority ஐ தீர்மானிப்பது NOTA வா தான் இருக்கு.

அதுவும் இல்லாம Nota க்கு மெஜாரிட்டி விழுவதை கண்டு அரசியல்வாதிகளே NOTA விற்கு வாக்களித்தவர்களின் கோரிக்கைகளை கேட்க வரலாம்.

இது ஒரு எதிர்ப்பின் சின்னமாகவே தான் பார்க்க படுகிறது.

முந்தைய பதிவில் வாக்களிப்பதின் அவசியத்தை குறித்து பதிவிட்டிருந்தேன்.

அப்பவும் எனக்கு வாக்களிக்க பிடிக்கல. இந்த தேர்தலே வேண்டாம் என்று சொல்பவர்கள் தாராளமாக சென்று NOTA க்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள்.

உங்கள் புறக்கணிப்பையும் வெளிப்படுத்துங்க.

இது உடனடியாக மாறுமா என்று தெரியாது. ஆனால் கண்டிப்பாக இது ஒரு அதிர்வலையை உண்டாக்கும்.

ஏன்னா இது மக்களாட்சி… நாமே நமக்கு எஜமானர்கள்!

நன்றி🙏💕