இங்கே உள்ள ஒரு உளவியலை பற்றி எழுத வேண்டுமென்று நினைக்கிறன்…
திமுக கட்சி ஒரு பக்கம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வளர்த்து ஓட்டு வாங்க துடிக்கிறது, பாஜக இன்னொரு பக்கம் இந்து அடிப்படைவாதத்தை வளர்த்து ஓட்டு வாங்க துடிக்கிறது…
ஆக, இந்த இரண்டு மதவெறி கட்சிகளின் மதவெறி கருத்துக்களின் தாக்கம் இந்த சமூகத்தில் நிலவுவதால், எந்த மதத்தையும் ஆதரிக்காமல் நடுநிலையாக நேர்மையோடு இருக்கும் நாம் தமிழர் கட்சியின் மீது இந்த இரண்டு கூட்டத்தினருக்கு ஒருவித சந்தேகமும், வெறுப்பும் இருக்கும்…
அதாவது, திமுகவின் இஸ்லாமிய அடிப்படைவாத கருத்தியலால் ஈர்க்கப்பட்டவர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஒரு இந்துத்வா கட்சியாகவும், பாஜகவின் இந்துத்வ அடிப்படை கருத்தியலால் ஈர்க்கப்பட்டவர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஒரு இஸ்லாமிய கட்சியாகவும் தெரிகிறது…
அதாவது இந்துக்களால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படும்போது நாம் தமிழர் கட்சியினர் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் பக்கம் நிற்கிறார்கள், அதே போல இஸ்லாமியர்களில் எங்கேனும் இந்துக்கள் பாதிக்கப்பட்டால் நாம் தமிழர் கட்சியினர் பாதிக்கப்பட்ட இந்துக்கள் பக்கம் நிற்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதே அறம், அதுவே தமிழ்த்தேசியம்.
மத அடிப்படைவாத கருத்தியலில் இருந்து வெளியே வந்து “சிந்திக்கும்” மக்களுக்கு நாம் தமிழர் கட்சி ஒரு தேசிய இன விடுதலை கட்சி என்ற உண்மை புரிகிறது!
நன்றி – ஆர்த்திக்