ஆஸ்ரேலிய அரசியல்வாதி hugh mcdermott இனால் முன்னெடுக்கப்பட்ட ஈழ இனப்படுகொலை தொடர்பான விவாவதங்கள்,நடவடிக்கைகளில் இணைய இடையூறு விளைவித்த சிங்களவர்களை எதிர்த்து இணையத்தில் போர் நடாத்தி நாம் தமிழர் கட்சி வென்று காட்டியுள்ளது.சில ஆயிரங்களாக இருந்த இணைய ஆதரவு கையெழுத்து இயக்கத்தை இலட்சமாக கட்டியெழுப்பி சிங்களவர்களுக்கு இணையத்தில் பதிலடி கொடுத்துள்ளது.இதற்கு நன்றி தெரிவித்து ஆஸ்ரேலிய அரசியல்வாதி hugh mcdermott கடிதம் ஒன்றை நாம் தமிழர் கட்சிக்கு அனுப்பியுள்ளார்.அதில் ஈழ இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் விடயங்களில் இருந்து தான் பின்னிற்க போவதில்லை என்றும்,தொடர்ந்து அயராது பாடுபடுவேன் என்றும்,ஒத்துழைப்பு கொடுத்து ஊக்குவிப்பதற்கு நன்றி என்றும் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் ,இனி வரும் இணைய யுகத்தில் ஈடுஇணையில்லாத வளர்ச்சியை கண்டு,அதனை ஒரு ஆயுதமாக பாவித்து எதிரிகளை ஒடுக்க திடசங்கற்பம் பூண வேண்டும்.உலகம் முழுக்க பரந்து வாழும் தமிழர்களால் முடியாத ஒன்றே இனி இருக்ககூடாது.தமிழர்கள் 3-4 கோடி பேர் இணையம் பாவித்து கொண்டுள்ளனர்.ஆனால் தமிழர்கள் விடுதலை போராட்டம் சம்பந்தப்பட்ட வீடியோக்களை யூடிப் நிர்வாகம் தடைசெய்து அழிக்கின்றது.விடுதலைபுலிகள் தொடர்பான போட்டோக்கள் காணொளிகள் முகநூலில் இருந்து உடனுக்குடன் அகற்றப்படுகின்றன.இவை அனைத்துக்கும் தீர்வு காண நாம் ஒன்றிணைய வேண்டும்.இணையத்தில் ஒரு பெரும் போரை ஆரம்பித்து எமது எதிரிகளை நிலைகுலைய செய்து எமது போராட்ட நியாயத்தை உலகுக்கு இடைவிடாது அறிவிப்போம்.எம்மால் முயன்றால் முடியாதது எதுவுமில்லை.. ட்விட்டர்,பேஸ்புக்,யூடிப் இவை எல்லாவற்றிலும் நம் அதிகாரம் இருத்தல் வேண்டும்.தாம் போராடினால் நாம் எதிர்பார்ப்பதை விட அதிகம் கிடைக்க வாய்ப்புண்டு.காரணம் நாம் அவ்வளவுக்கு வலிமை வாய்ந்த ஒரு இனம்..
எம்மை தொடர்பு கொள்ள.. [email protected]