ஒட்டு குழுக்களின் பிடியில் யாழ் கல்வி சமூகம்!

114

யாழ்ப்பாண பல்கலை கழக சமூகம் மீது தொடர்ச்சியாக பாலியல் அவதூறுகள் , மத ரீதியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எவ்விதமான ஆதாரமற்ற வகையில் நடத்தப்படும் இவ்வாறான தாக்குதல்களோடு புலிகள் இயக்க குடும்ப உறுப்பினர்களுக்கு attendance/participation இல்லாமல் பட்டமளிக்கப்பட்டதாகவும் மிக மோசமான பொய்களை பரப்பி வருகிறார்கள்

இந்தியா இராணுவத்தோடு சேர்ந்து இயங்கிய EPRLF ஐ சேர்ந்த ஒரு சிறு கும்பல் வெளிநாடுகளில் இருந்து இந்த அவதூறுகளை செய்து வருகிறது. இவர்களோடு இலங்கை அரசாங்கங்களோடு சேர்ந்து இயங்கும் மத வெறி கும்பல் ஒன்றும் இந்த வேலைகளை செய்து வருகிறது

யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் Teaching & Learning environment, High Quality Research Profile, Employbility, Student to Staff Ratio, Value added Score, Spend per Student, Recuritment, International Collobrations உட்பட்ட பல விடயங்கள் குறித்து பேச பட வேண்டும் .

இதுமட்டுமின்றி இலங்கை அரசாங்கத்தின் பின்னணியில் EPDP ஒட்டுக்குழுவை சேர்ந்தவர்கள் பல்கலை பேரவைக்கு நியமிக்கப்படுகிற அவலம் பற்றி பேச வேண்டும் .

இலங்கை பல்கலை ஒன்றுக்கு தகுதி பெற முடியாத அங்கயன் ராமநாதன் அவர்களின் உறவினர்கள் பல்கலை பேரவைக்கு நியமிக்கப்படுகிற துயரம் குறித்து பேச பட வேண்டும்

பல்கலை கழகம் சிங்கள மயப்படுத்தப்படுவது குறித்து பேசப்பட வேண்டும் .

யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் சுயாதீன தன்மை குறித்து பேச பட வேண்டும் .

வள ஒதுக்கீடுகளில் நிலவும் குறைபாடுகள் , நிதி ஒதுக்கீடுகள் , பல்கலை மீதான இராணுவ தலையீடுகள், சட்டவிரோதமாக பதவி நீக்கப்பட்ட துணைவேந்தர் என பல விடயங்களில் அக்கறை செலுத்தப்பட வேண்டும்

ஆனால் இது பற்றி எல்லாம் அக்கறை செலுத்த ஒட்டுக்குழுக்களும் மத வெறி கும்பல்களும் தயாரில்லை . மாறாக பல்கலை சமூகம் குறித்து ஆதாரமற்ற அவதூறுகளை பரப்புவதில் பரப்புவதில் முன் நிற்கிறார்கள். உயர் கல்வி நிறுவனமான பலகலை சமூகம் குறித்து ஒட்டுக்குழுக்களும் மத வெறி கும்பலும் நடத்தும் பொய் பரப்புரைகளை யாழ்ப்பாண பல்கலை கழக சமூகம் அமைதியாக கடந்து போக கூடாது

இனமொன்றின் குரல்