ஒட்டு குழுக்கள் ஈழத்தில் நடாத்திய பாலியல் வேட்டை – சிறப்பு கட்டுரை

521

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து 2007 மே 18 திகதி அமெரிக்கா வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பட்ட செய்தியில் , இராணுவம் செய்ய முடியாத “வேலை” செய்யும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களின் வேலைகளில் தலையிட வேண்டாம் என்று பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டபய ராஜபக்ஷ இலங்கை ராணுவ தளபதிகளுக்கு உத்தரவிட்டதை அமெரிக்கா தூதுவராலயம் அம்பலப்படுத்தி இருந்தது.

குறிப்பாக தமிழ் துணை ராணுவ ஒட்டுக்குழுக்கள் கொலைகள், கொள்ளைகள் மட்டுமின்றி விபச்சாரம், பெண்களை கடத்துதல் போன்ற போன்ற கொடூர செயல்களிலும் கட்டுப்பாடின்றி ஈடுபட கோட்டபய ராஜபக்சே அனுமதி அளித்து இருந்தார்

இந்த வகையில் டக்ளஸ் தேவானந்தா சார்ந்த EPDP கும்பல் நெடுந்தீவை மையமாக கொண்டு விபச்சார தேவைகளுக்காக குழந்தைகளை /பெண்களை கடத்தியதை World Vision நிறுவன அதிகாரிகள் அம்பலப்படுத்தி இருந்தனர் . சில நேரங்களில் கட்டாயபடுத்தியும் சில சமயங்களில் அவர்களின் பொருளாதார பாதுகாப்பு என்ற வாக்குறுதியுடனும் விபச்சாரத்திற்கு பெண்கள் கடத்தப்பட்டனர் . இதுமட்டுமின்றி இந்தியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கும் பெண்களை EPDP கும்பல் பாலியல் தொழில்களுக்காக கடத்தினார்கள் .அந்த காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த கணேஷ் அவர்களும் டக்லஸ் தேவானந்தா சார்ந்த EPDP கும்பல் இலங்கை இராணுவ உதவியுடன் விபச்சார வலையமைப்பை நடத்தியதை அமெரிக்கா தூதுவராலய அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தி இருந்தார்

அதே போல கிழக்கில் விபச்சாரத்திற்கு பெண்களை கடத்தும் வேலைகளை பிள்ளையான் , கருணா , இனியபாரதி போன்றவர்கள் செய்தனர்.

குறிப்பாக பிள்ளையான் குழுவை சேர்ந்த மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் முதலவர் சிவகீர்த்தா பிரபாகரன் அவர்கள் மட்டக்களப்பில் விபச்சார விடுதிகள் நடத்தி வந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு இருந்தார். இதே போல கருணா குழுவை சேர்ந்த இனியபாரதி என்பவன் அம்பாறையில் விபச்சாரம் , போதைவஸ்து கடத்தல் , ஆட் கடத்தல் என கொடூரங்களை நடத்தி வந்த நிலையில் இப்போது ஆட்கடத்தல் வழக்கு ஒன்றில் சிறை வைக்கப்பட்டு இருக்கிறான் .

இதுமட்டுமில்லாது பிள்ளையான் குழு பல பகுதிகளில் பெண்களை கடத்தி இலங்கை இராணுவத்திற்கு விருந்தே வைத்தார்கள். குறிப்பாக திருகோணமலை கடற்படை உளவுப் பிரிவை சேர்ந்த கப்ரன் சுமித் என்பவருடன் இணைந்து பிள்ளையான் கும்பல் விருந்து ஒன்று பல இராணுவ அதிகாரிகளின் பேசு பொருளாக இருந்தது.

கடற்படை அதிகாரிகள் சுமித் , சிசில் குமார, இரட்ணநாயக்கா ஆகியவர்கள் கலந்து கொண்ட குறிப்பிட்ட விருந்தில் இரவு ஒன்பது (09) மணியளவில் பிள்ளையான் இரண்டு இளம் பெண்களை அவர்கள் முன் கொண்டு வந்து நிறுத்தி இருந்தார். குறிப்பிட்ட இளம் பெண்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண்கள். திருகோணமலையில் குடியிருந்த அவர்களை பிள்ளையான் தனது நபர்களை அனுப்பிக் கடத்தி வந்திருந்தார். ஒரு பெண்ணின் பெயர் விஜி (வயது 22), அடுத்தப் பெண்ணின் பெயர் தெரியவில்லை (வயது 23) இருக்கும். இவ்வாறு சிங்கள கடற்படை அதிகாரிகளை மகிழ்விக்க பெண்களைக் கடத்தி வந்து பிள்ளையான் கும்பல் விருந்து வைத்தனர் .குறிப்பிட்ட நாள் விருந்து முடிய நள்ளிரவுக்கு மேலானது. அந்த விருந்தில் கலந்து கொண்டவர்களால் சிதைக்கப்பட்ட அந்தப் பெண்கள் இருவரையும் பிள்ளையானது நபர்கள் கந்தளாய் காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றுவிட்டு உடல்களை காட்டுக் குளைகளால் மூடிவிட்டுச் போய் விட்டார்கள்

அதே போல மட்டு-வந்தாறுமூலை பல்கலைக்கழக மாணவியாக இருந்த 21 வயதேயான தனுஸ்கோடி பிறேமினி. என்கிற பெண்ணை சந்திவெளி இராணுவ முகாமை சேர்ந்த கலீல் என்பவனின் உதவியுடன் வெலிகந்தை இராணுவ சோதனை சாவடியில் வைத்து கடத்திய பிள்ளையான் குழுவை சேர்ந்த பிள்ளையான், சிந்துஐன், யோகன், புலேந்திரன், குமார், சிரஞசீவி ஆகியோர் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்தனர்.

அப்பாவி பெண்களை தங்கள் தேவைகளுக்கும் பணம் சம்பாதிக்கவும் கடத்தி கற்பழித்து படுகொலை செய்த தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்கள் குழந்தைகளையும் விட்டு வைக்க வில்லை. திருகோணமலையில் 2009 மார்ச் 11ஆம் திகதி 6 வயது மாணவியான வர்ஜா யூட் றெஜி என்ற சிறுமியை கப்பம் பெறும் நோக்கில் கடத்திச்சென்று படுகொலை செய்தனர். இதேபோன்று மட்டக்களப்பில் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 31ஆம் திகதி மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவியான 8 வயதுடைய தினுசிகா சதீஸ்குமார் என்ற மாணவியையும் கப்பம் பெறுவதற்காக கடத்தி சென்று படுகொலை செய்தனர்.

இவ்வாறு சிங்கள காடையர்கள் கூட செய்ய துணியாத அவலத்தை தமிழ் மக்களுக்கு செய்த தமிழ் ஒட்டுக்குழுக்கள் அபிவிருத்தி (?) என்கிற போர்வையில் ராஜபக்சே குடும்பத்தின் பின்னணியில் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள்

தமிழ் மக்கள் எக்காரணம் கொண்டும் இந்த கொடூர கொலையாளிகளுக்கு துணை நிற்க கூடாது.

இனமொன்றின் குரல்