ஓணம் பண்டிகை
இந்த ஓணம் பண்டிகை எப்பவுமே கேரளத்தில 10 நாட்கள் நடைபெறும், ஆனா இதுக்கு முன்னாடி ஒரு 4 நாட்களா தான் இது இருந்துச்சு.
தமிழ்நாட்டிற்கு எப்படி ஒரு பொங்கலோ, அதே போல தான் கேரளத்துக்கு ஒரு ஓணம்.
அதே போல தான் இங்க எப்படி பொங்கல்ல ஒரு controversy இருக்கோ, அதே போல அங்க ஓணம் பண்டிகையின் வரலாற்றிலும் ஒரு சில controversyகள் இருந்துட்டு தான் வருது.
இந்த ஓணம் பண்டிகையோட வரலாற்ற பாக்குறதுக்கு முன்னாடி கடவுள் என்று வெகுஜன மக்கள் இறைவனாக வழிப்படும் விஷ்ணுவோட அவதாரத்தை பற்றி ஒரு பார்வை பார்போம்.
மஹாபாரதத்தில குருசேத்திரப் போர் நடைபெற துவங்கும் போது அர்ஜுனன் திடீர்னு இந்த போர் அவசியம் தானா வாசுதேவா னு கிருஷ்ணனிடம் ஒரு கேள்வி கேட்பான்.
அப்போது கிருஷ்ணன் அர்சுனனிற்கு போரின் அவசியம் தர்மம், அதர்மம் இதையெல்லாம் பற்றி தெளிவாக விளக்கி, எந்த இடத்தில் தர்மம் அழிக்கப்பட்டு அதர்மம் அதிகமாகிறதோ, அந்த இடத்தில் அந்த அதர்மத்தை அழித்து தர்மத்தை ஸ்தாபிக்க கடவுள் ஒரு அவதார் ( அவதாரம்) எடுப்பார்னு சொல்லி அவரோட விஸ்வரூப தரிசனத்தை அர்சுனனிற்கு காட்டுவதாக வரலாறு குறிப்பிடுகிறது. ஆனால் அதே போரில் அதர்மத்தை வைத்து தான் கௌரவர்களை தோற்கடிப்பார்கள் என்பதும் அதே வரலாறு தான் குறிப்பிடுகிறது. அப்படி விஷ்ணு ஒரு பத்து அவதாரம் எடுத்திருக்காருனு இந்துக்களும் நம்புகின்றனர்.
முதலாவதாக ஹயக்ரீவர் பிரம்மா தூங்கி கொண்டிருந்த நேரத்தில் அவரது கைகளிலிருந்த வேதங்களை திருடி கடலில் மறைத்து வைத்தானாம். அதை மீனுருவில் வந்து மீட்டெடுத்து குதிரை தலை அரக்கனை கொன்று வேதத்தை மீட்டுடெடுத்தாரம் மீன் அவதாரம் பொறிந்த விஷ்ணு.
அடுத்ததாக அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் மூண்ட நேரத்தில் திருப்பாற்கடலை கடைந்தால் அமுதம் எடுக்கலாம். அந்த அமுதத்தை வைத்து வெற்றி பெறலாமென்று தேவர்களும் அசுரர்களும் கடலை கடைந்து கொண்டிருக்கும் போது தேவர்களுக்கு அச்சாக தன் முதுகை தந்தாராம் ஆமை அவதாரம் புரிந்த விஷ்ணு.
அடுத்து வந்த பன்றி அவதாரம், வேதங்களை திருடிய ஹிரணியாட்சன் என்ற அசுரனை கொன்று வேதத்தை மீட்டது.
நாலாவதாக, ஹிரியணியன் மகன் பிரகலாதன் தன் தந்தையை வழிபடாது கடவுளை வழிபட்டு வந்ததால், பிரகலாதனிடம் கடவுளை காட்ட சொல்லி ஒரு தூனை உதைத்தபோது அதிலிருந்து வெளிபட்ட நரசிம்மர் ஹிரியணியனின் வயித்தை கிழித்து கொன்றாராம்.
ஐந்தாவது அவதாரம் தான் வாமனன், ஹிரியணியன் இறந்த பிறகு அவனுடைய கடவுளுக்கு பயந்த மகன் பிரகலாதன் ஆட்சிக்கு வருகிறான். அவனுக்கு பின் அவனுடைய மகன் விரோசனன், அவனுக்கு பின் அவனுடைய மகாபலி ஆட்சிக்கு வருகிறான். இந்த மகாபலியை வாமனன் கொல்கிறார்.இந்த மகாபலியை பற்றி பிறகு பார்ப்போம்.
அடுத்தாக, கங்கை மைந்தரான பீஷ்மருக்கும், பாண்டவ கவுரவர்களான துரோணருக்கும், தாழ்த்தப்பட்டவனின் மகன் என்று எல்லோரலும் புறக்கணிக்கப்பட்ட மாவீரன் கர்ணனுக்கும், ஆசிரியராக இருந்த பரசுராமர் அவதாரம் புரிகிறார் விஷ்ணு.
அதன்பின் ஏழாவதாக நாம் அனைவரும் அறிந்த Controversial ஆன ராமனும், அதன்பின் கிருஷ்ணனும் பலராமனும் பிறந்தார்கள். இவையே முறையாக எட்டு ஒன்பதாம் அவதாரமாக சித்தரிக்கபடுகின்றது.
அடுத்த பத்தாவது அவதாரமானது கல்கி. நம்ம மர்மதேசம் விடாது கருப்பில் வரும் கருப்பு மாறி குதிரையில் travel செய்து நாத்திகர்களையும் கெட்டவர்களையும் கொல்லும் அவதாரம்.
இதுல நாம மகாபலியை பற்றி பார்த்தோம். இந்த மகாபலியை வாமன அவதாரமெடுத்த விஷ்ணு கொல்வதையே ஓணம் பண்டிகையாக கேரளத்தில் கொண்டாடப்படுகிறது என்பது அங்குள்ள பார்ப்பனிய மேல்சாதி மக்களின் வாதம்.
ஆனால் இந்த ஓணம் பண்டிகை எல்லோராலும் வெகு விமரிசையாக கேரளத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. சாதியை தாண்டி வேறு மதத்தினர் கூட ஓணத்தை கொண்டாடுவதுண்டு. தமிழ்நாட்டிலயே முன்னாடி 7 நாட்களுக்கு ஓணம் கொண்டாடப்பட்டு வந்ததாம். இப்படி உள்ள ஒரு பண்டிகையை மேல்சாதியினர் சொந்தம் கொண்டாடுவது கீழுள்ள மக்களின் மீது பண்டிகையிலும் தாம் அவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று காட்டுவதை போல் தான் உள்ளது.
இதைவிட ஒருபடி மேலே போய் விஷ்ணு பலராமன் அவதாரம் புரியவில்லை, கடவுளே வேண்டாம், அன்புதான் எல்லாம் என்று ஸ்தாபித்த புத்தர் தான் விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் என்று பல இந்துக்கள் வேறு மதத்தையும் இந்துவோடு இணைத்து வாதம் செய்து கொண்டிருக்கின்றனர்.
According to google, ஓணம் ஏன் கொண்டாடப்படுகிறது என்றால்,
மகாபலி ஆட்சியில் பார்ப்பனர்களாகிய மேசாதி மக்களுக்கு வழங்கும் சலுகைகள் நிறுத்தப்பட்டு, கீழ்சாதி மக்களும் கோவிலுக்கு போகலாம் என்று ஆட்சி அமைக்கப்பட்டது. அப்போது சமத்துவம் மேலோங்கி ஆட்சி நடத்தப்பட்டது. இதை பார்த்ததும் சுரர்களுக்கு கோவம் வந்தது. ( சுரர் என்றால் தேவர், opposite to அசுரர்)
என்னதான் ஒரு பக்கம் சமத்துவம் பார்த்தாலும், மகாபலிக்கு இராவணனை போல கடவுள் நம்பிக்கை இருந்து வந்தது. அதனால் 100 யாகம் கடவுளுக்கு நடத்தி தான் வேண்டியவற்றை கடவுளிடம் கேட்டு வாங்க திட்டமிட்டான்.
99 யாகங்கள் வெற்றி பெற, மீதம் ஒன்று இருந்த நேரத்தில் சுரர்களுக்கு பயம் உண்டாகியது. மகாபலி 100 வேள்வி நடத்திவிட்டால் நம்மலை எல்லாம் கொன்று விடுவானென்று இந்திரனின் தாயரிடம் சென்று முறையிட்டனர். இந்திரன் தாயார் பிராம்மவிடம் சென்று முறையிட, 12 நாட்கள் விஷ்ணு வை நினைத்து தியானம் செய் என்று இந்திரனின் தாயாரிடம் சொல்லி அனுப்பினார்.12 நாட்களின் இறுதியாக விஷ்ணுவே இந்திரனாக ( வாமனன்) அந்த தேவிக்கு மகனாக பிறந்தார். பின் சரியாக மகாபலி 100 வது யாகம் நடத்தும் போது வாமனன் சிறுவன் போல வேடமணிந்து சென்று மகாபலியிடம் வரம் கேட்க போய் மகாபலியை பாதாளத்தில் அடைத்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளது புராணம்.
இதில் மகாபலியை விரும்பிய மக்கள் அனைவருக்கும் சுரர்களின் ஆட்சி பிடிக்கவில்லை. அதனால் மாகபலி வேண்டும் என்று கலவரம் செய்தனர். அவர்களுகாக மகாபலி வருடம்தோறும் 10 நாட்கள் மக்கள் முன் தோன்றுவார் என்று இந்திரன் வாக்குறுதி அளித்தான். அதுவே மகாபலி யின் ஆட்சியின் நினைவாக ஓணம் கொண்டாடப்படுகிறது என்பதே கூகுளின் வாதம். மேலும் இதுவே பார்பனர்கள் அல்லாத இந்துக்களின் வாதமாகவும் உள்ளது.
பண்டிகையிலும் பார்பனர்கள் தம் அடக்குமுறையை காட்டும் விதமாக தான் இது உள்ளது. மக்களின் மனதில் மகாபலியை நீக்கி வாமனனின் பிறந்ததினமாக தான் ஓணம் கொண்டாடப்படுகிறது என்று சித்தரிக்கும் சூழ்ச்சிகள் தான் இப்போது கேரளாவில் நிகழ்ந்து வருகிறது.
இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம், கடந்த 2017 இல் மகாபலி ஆட்சி செய்த இடம் திருக்காரையில் அங்கே உள்ள அறநிலையத்துறை மகாபலியின் வெண்கல சிலை ஒன்றை நிறுவ ஏற்பாடு செய்தது.
ஆனால் இதை கேரள வலதுசாரியான இந்து ஐக்கிய வேதி எதிர்த்தது. இறுதியில் மகாபலியும் ஒரு விஷ்ணு பக்தன் என்று சொன்ன பிறகு தான் அந்த கட்சி தன்னுடைய எதிர்ப்பை கைவிட்டது. இந்து மதத்தின் புராண படியே பார்த்தால் கொள்கை மிக்க ஒருவனின் ஆட்சியை சூழ்சியில் வீழ்த்தி கொள்கையற்ற ஒருவன் ஆட்சி நிறுவி, ஒரு சார்பாக செயல்பட்டு அவன் மக்களை காப்பாற்றி பிற மக்களை ஏமாற்றியவனாகவே நான் விஷ்ணுவையும் இந்திரனையும் பார்க்கிறேன். அதனால் தான் நான் மட்டுமல்ல இன்று பெருவாரியான கூட்டம் இராவணனையும் மகாபலியை ஆதரிக்கின்றது.
ஜிப்ஸி படத்தில் ஒரு வசனம் வரும்.
நீ என்ன சாதிடா என்னும் கேள்விக்கு
நான் மதம்பிடிக்காத மனுஷ சாதினு ஜீவா பதில் சொல்லுவார்.
அதே மதம் பிடிக்காத மனுஷ சாதி தான் இதுநாள் வரை ஓணத்தை தன் விழாவாக கொண்டாடி வந்தது. இன்று அதில் பார்ப்பனர்கள் தங்களது கொள்கையற்ற கடவுள்களை திணித்ததால் தான் இஸ்லாமியரும் கிறித்தவர்களும் 2018 இலிருந்து நேரடியாக ஓணத்தை புறக்கணிக்க ஆரமித்தனர்.
ஆனால் இன்றும் அதே மதம் பிடிக்காத மனுச சாதியால் தான் ஓணம் ஒரு தேசிய பண்டியாக கொண்டாட பட்டு வருகிறது.
என்றைக்கு மகாபலி அழிக்கபடுகிறானோ, அன்றைக்கே இந்த ஓணமும் அழிந்து விடும். இந்த மதம்பிடிக்காத சாதியும் அழிந்து விடும்.
நன்றி🙏💕