ஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.

263

பல தெரு நாய்கள் குரைக்கத்தான் செய்யும்!!! ஆனால், கடிக்காது!, கடிக்கிற நாய்கள் தொடர்ந்து குரைக்காது!!!

இந்தத் தெரு நாய்களுக்கெல்லாம் நாம் நின்று எதிர்ப்பைக் காட்டினால்… எம் இலக்கை எளிதில் அடைய முடியாது! குரைக்கிற நாய்கள் குரைக்கட்டும்… அதிலும் சம்மந்தமே இல்லாமல் குரைக்கிற நாய்களும் இருக்கத்தான் செய்யும்!!!

குரைக்கிற நாய்கள் எல்லாம் வீரர்களாக முடியாது! குரைப்பதை சட்டை செய்யாமல் பயணத்தை தொடருகிறவர்களெல்லாம் கோழைகளாாக முடியாது!!!

எதிர்ப்புக்களும், விமர்சனங்களும் இல்லாமல் யாரும் தலைவனாகவும் முடியாது!!! இரத்தமும், வியர்வையும் சிந்தாமல் இலகுவில் சுதந்திரமும் பெறமுடியாது!

அதனால் நம் பயணத்தை தொடருவோம்… இலக்கை அடைவோம்!!!!

வார்த்தைகளில் வாழாமல்…
வாழ்க்கையினில் வாழ்ந்து காட்டுவோம்!!

-வல்வை அகலினியன்.